Dhurandhar 2: துரந்தர் 2 படத்தை பாராட்டிய முதல் தமிழ் நடிகர்.. அட அதுலயும் அரசியலா?
சென்னை: இயக்குநர் ஆதித்ய தார் இயக்கத்தில் கடந்த மார்ச் 19ஆம் தேதி வெளியான படம் துரந்தர் 2. இந்த படத்தை அவரே தயாரிக்கவும் செய்துள்ளார். படத்தில் ரன்வீர் சிங் கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மாதவன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது ஏற்கனவே வெளியான துரந்தர் படத்தின் இரண்டாம் பாகம். இப்படி இருக்கையில் இந்த படத்தை பாலிவுட் நட்சத்திரங்கள், டோலிவுட் நடிகர்கள் என பலரும் வாழ்த்தினர். தமிழ் திரையுலகில் இருந்து இயக்குநர் ஷங்கர் மட்டும் வாழ்த்தி பதிவிட்டுருந்தார். இந்நிலையில் நடிகர் சரத்குமார் பாராட்டி உள்ளார்.
துரந்தர் 2 படமானது உண்மை சம்பவத்துடன் கற்பனை திரைக்கதையை மையமாக கொண்டு படத்தை உருவாக்கி உள்ளார்கள். படம் மொத்தம் 4 மணி நேரம் ஓடினாலும் ரசிகர்களுக்கு சலிப்பு தட்டாத வகையில் படத்தின் திரைக்கதையை உருவாக்கி உள்ளார்கள் என்று ரசிகர்கள் பலரும் விமர்சித்துள்ளனர். அதேபோல் பிரபலங்கள் பலரும் தேசப்பற்று என்றால் அது இதுதான், இப்படி ஒரு படத்தை கொடுத்ததற்கு நன்றி. இது ஒரு வரலாற்றுத் தருணம். ஆதித்ய தார் போன்ற இயக்குநர்கள் இந்திய சினிமாவின் பெருமை என்று எல்லாம் படக்குழுவை பாராட்டினார்கள்.

படத்தில் பிரதமர் மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்புக்கு காரணம் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் கலக்கப் பார்த்த கள்ள நோட்டுக்களை தடுப்பதற்காகத்தான் என்று பயங்கரமாக முட்டு கொடுத்துள்ளார்கள் என்று இணையவாசிகள் பலரும் பதிவிட்டு வந்தார்கள். அதேபோல் நடிகை திவ்யா ஸ்பந்தனா தனது எக்ஸ் பக்கத்தில் இந்த படத்தை தியேட்டரில் பார்ப்பது வேஸ்ட். கடமைக்கு என்று ஒரு சில படங்களைப் பார்ப்போம் அல்லவா அதுபோல வீட்டில் ஓடிடியில் இந்தப் படத்தை வேண்டுமானால் பாருங்கள்.
சரத்குமார்: கொஞ்சம் கூட லாஜிக் இல்லாத காட்சிகளை படத்தில் வைத்துள்ளார்கள். அதை எல்லாம் பார்க்கும் போது சிரிப்பாக இருக்கிறது என்று எல்லாம் பதிவிட்டிந்தார். இப்படி இருக்கையில் இந்த படம் குறித்து நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் படத்தின் விமர்சனம் குறித்து பதிவிட்டுள்ளார். அதாவது, " இதுவரை யாரும் சொல்லாத மிகவும் சென்சிட்டிவான கதையை, மிகவும் திறமையாக சொல்லி உள்ளார்கள்.
பரபரப்பு: தன்னலமற்ற நாட்டுப்பற்றுக்காக கொண்டாடப்படாத, பேசப்படாத, பாராட்டப்படாத தியாகிகளின் கதையை இந்த துரந்தர் பேசி உள்ளது. இதுதான் உண்மையிலேயே துரந்தர். இயக்குநர் ஆதித்ய தார் உள்ளிட்ட மொத்த படக்குழுவினருக்கு வாழ்த்துகள். நிஜ சம்பவங்களுடன் பின்னிப் பிணைந்த அனைவரையும் கட்டிப் போடும் ஒரு கதைக்களம். படத்தில் இருந்த பரபரப்பு , ரன்வீர் சிங் நடிப்பு என அனைத்தும் தியேட்டரில் ஸ்கீரின் ஆஃப் ஆகும் வரை நம்மை இருக்கையில் கட்டிப்போட்டுவிட்டது" என்று படத்தையும் படக்குழுவினரையும் வாழ்த்தி உள்ளார்.
அரசியலா: இப்படி இருக்கையில், தமிழ் சினிமா நடிகர்கள் யாருமே துர்ந்தர் 2 படத்தை கண்டு கொள்ளாதபோது, சரத்குமார் மட்டும் பாராட்ட காரணம் அவர் தற்போது பாஜகவில் உள்ளார். அதுதான் காரணம் என்று கூறி வருகிறார்கள் சில நெட்டிசன்கள். துரந்தர் 2 படம் முதல் இரண்டு நாளில் ரூபாய் 350 கோடிகள் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications











