சரத்குமார்- பிரியாமணி ஜோடி சேரும் 'அஞ்சாத சண்டி'!
தமிழில் படங்களே இல்லாத சரத்குமாரும் ப்ரியாமணியும் முதல் முறையாக இணைந்து நடிக்கும் படம் அஞ்சாத சண்டி.
ஓமிக்ஸ் கிரியேசன்ஸ் என்ற படநிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ப்ரியாமணி அதிரடி ஆக்ஷன் நாயகியாக நடிக்கிறார்.
அவருக்கு சண்டைப் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளராக வருகிறார் சரத்குமார்.

பழி வாங்கல்
படத்தில் முக்கிய வேடத்தில் வருகிறார் ஆசிஷ் வித்யார்த்தி. ஆணாதிக்கம் மிக்க நபரான ஆசிஷ் வித்யார்த்தியைப் பழிவாங்க சரத்குமாரால் பயிற்சி கொடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படும் பெண்தான் ப்ரியாமணி.

லண்டன் பெண்
இந்தப் படத்தில் லண்டனைச் சேர்ந்த ஸ்கேர்லெட் வில்சன் என்ற பெண் ஒரு பாடல் காட்சியில் நடித்துள்ளார். படுகவர்ச்சியான பாடலாக இதை எடுத்துள்ளார்களாம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு
பிரியாமணி இந்த படத்தில் முதன் முறையாக ஆக்ஷன் அவதாரம் எடுக்கிறார். சண்டை காட்சிகளுக்காகவே பலகோடி ரூபாய்கள் செலவழிக்கப்பட்டு மிக பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரியாமணி தமிழில் நடிப்பதால் சண்டை காட்சிகளுக்காக மிகுந்த பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

சரத்குமார்
காஞ்சனா , சென்னையில் ஒரு நாள் படங்களுக்கு பிறகு சரத்குமாருக்கு இப்படம் மற்றுமொரு திருப்புமுனையாக அமையும் என்கிறார் படத்தின் இயக்குனர் சமுத்திரம். இவர் தெலுங்கில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர்.


Click it and Unblock the Notifications











