சரத்குமார் நடிக்கும் காட்சிகள் ஓவர்... வில்லேஜ் ஷெட்யூலுக்கு காத்திருக்கிறது சசிகுமாரின் நாநா டீம்!

By

சென்னை: நாநா படத்தில் நடிகர் சரத்குமார் நடிக்கும் காட்சிகள் முடிவடைந்துவிட்டதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தை இயக்கியவர் நிர்மல் குமார். இவர் அடுத்து, அரவிந்த்சாமி நடிப்பில் சதுரங்க வேட்டை 2 படத்தை இயக்கினார்.

அடுத்து 'மிஸ் மேட்ச்' என்ற தெலுங்கு படத்தை இயக்கினார். இந்தப் படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது.

சித்ரா சுக்லா

சித்ரா சுக்லா

இப்போது அவர் தமிழில் இயக்கி வரும் படம், நா நா. கல்பத்ரு பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சரத்குமாருடன் இணைந்து சசிகுமார் நடிக்கிறார். ஹீரோயினாக நடிகை சித்ரா சுக்லா நடிக்கிறார். இவர் தெலுங்கில் மா அப்பாயி, ரங்குல ரத்னம், சில்லி ஃபெல்லோஸ் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

உதவி கமிஷனர் சரத்

உதவி கமிஷனர் சரத்

ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதன் ஷூட்டிங், ஐதராபாத்தில் பிரமாண்ட செட் அமைத்து நடந்தது. மேலும் ஆந்திராவின் மேலும் சில பகுதிகளில் படமாக்கப்பட்டது. இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. நடிகர் சரத்குமார் இதில் அசிஸ்டென்ட் கமிஷனராக நடிக்கிறார். அவர், சசிகுமாரையும் ஹீரோயினையும் துரத்துவது போன்ற காட்சிகள் அப்போது படமாக்கப்பட்டன.

ஆக்‌ஷன் காட்சிகள்

ஆக்‌ஷன் காட்சிகள்

சசிகுமார் நடித்த படங்களில், இதில்தான் ஆக்‌ஷன் காட்சிகள் மிரட்டலாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதில் சரத்குமார் நடிக்கும் காட்சிகள் முடிவடைந்துவிட்டன. அவர் அடுத்து மணிரத்னம் இயக்கும் பொன்னியில் செல்வன் ஷூட்டிங்கில் நாளை முதல் அவர் கலந்துகொள்வார் என்று தெரிகிறது.

கோவில்பட்டி, தேனி

கோவில்பட்டி, தேனி

இதையடுத்து இந்தப் படத்தின் கிராமத்து காட்சிகளின் ஷூட்டிங் மட்டும் பாக்கி இருக்கிறது. அது முடிந்ததும் மொத்த படத்தின் வசனகாட்சிகளின் ஷூட்டிங்கும் முடிந்துவிடும். கிராமத்து காட்சிகளைத் தேனி அல்லது கோவில்பட்டி அருகே படமாக்க, படக்குழு யோசித்து வருகிறது. இன்னும் முடிவாகவில்லை என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X