சரத்குமாரின் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'... தூத்துக்குடி சம்பவம் பற்றிய படமா?

சரத்குமார் நடிக்கும் வேளச்சேரி துப்பாக்கிச்சூடு திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

Recommended Video

சரத்குமாரின் வேளச்சேரி துப்பாக்கிச்சூடு படம் தூத்துக்குடி சம்பவமா?- வீடியோ

சென்னை: நடிகர் சரத்குமார் நடிக்கும் வேளச்சேரி துப்பாக்கிச்சூடு திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.

Sarathkumars Velachery Thuppakki Soodu shooting starts

வி.ஆர்.மூவஸ் சார்பில் டி.ராஜேஸ்வரி தயாரிக்கும் படம் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'. போலீஸ் திரில்லர் வகை படமான இந்த படத்தை எஸ்.டி.வேந்தன் இயக்கியுள்ளார். உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, மனித உரிமை மீறல்கள் மீதான போலீசாரின் பார்வையை பற்றி பேசுகிறது இந்தப் படம்.

Sarathkumars Velachery Thuppakki Soodu shooting starts

ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு சரத்குமார் இந்த படம் மூலம் மீண்டும் கதாநாயகனாகிறார். அவர் இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். நடிகை இனியா இந்த படத்தின் நாயகியாக, மனித உரிமை ஆர்வலர் வேடத்தில் நடிக்கிறார்.

Sarathkumars Velachery Thuppakki Soodu shooting starts

இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, நிழல்கள் ரவி உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது.

Sarathkumars Velachery Thuppakki Soodu shooting starts

சமீபத்தில் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சரத்குமார் நடிக்கும் இந்தப் படத்துக்கு வேளச்சேரி துப்பாக்கிச்சூடு என பெயரிடப்பட்டுள்ளதால், இந்த படம் தூத்துக்குடி சம்பவத்தை பற்றியதாக இருக்குமோ என்ற கேள்வி எழுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X