3 BHK Box Office: முதல் நாளே அட்டகாசமான வசூல்.. சூரியவம்சம் ஜோடிக்கு எப்போதும் மவுசு ஜாஸ்திதான்!

சென்னை: நடிகர்கள் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத், சைத்ரா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து நேற்று அதாவது, ஜூலை 4ஆம் தேதி ரிலீஸ் ஆனது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குநர் சாய் கணேஷ் இயக்கியுள்ளார். படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படத்தின் முதல் அறிவிப்பில் இருந்தே படத்தின் மீது ரசிகர்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வந்தது. அந்த வகையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

தமிழ் சினிமாவில் ஃபீல் குட் படங்கள் வெளியாவது என்பதே அரிதினும் அரிதான விஷயமாக மாறிவிட்டது. அவ்வப்போது நான் சில படங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்தும் படமாக மாறி வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களிலேயே ஃபீல் குட் படங்கள் எனப் பட்டியலிட்டால் குடும்பஸ்தன், டூரிஸ் ஃபேமிலி என ஒன்றோ, இரண்டோ படங்களைத்தான் குறிப்பிட முடியும். அந்த வரிசையில் படத்தின் ரிலீஸ்க்கு முன்னர் இருந்தே, 3 BHK படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் ஏற்படுத்தியது.

சூரியவம்சம் ஜோடி: அதுவும் படத்தில் அப்பா - அம்மா கதாபாத்திரங்களில் சரத்குமார் மற்றும் தேவயானி நடிக்கிறார்கள் என்றதும் சூர்யவம்சம் ஜோடி மறுபடியும் நடிக்கிறார்களேப்பா, அப்போ இது சூரியவம்சம் பாகம் 2ஆ என்றெல்லாம் கூட ரசிகர்கள் கேட்க ஆரம்பித்தார்கள். படத்தின் பெயர் தொடங்கி, டீசர், டிரைலர் என எல்லாமே பெரும்பான்மையாக இருக்க கூடிய நடுத்தர வர்க்க குடும்பத்தினரின் மிகப்பெரிய கனவாக இருக்கக் கூடிய சொந்த வீடு வாங்குதல் என்ற கனவை மையமாகக் கொண்டு 3 BHK படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Sarathkumar Siddharth Devayani 3 BHK Movie Gained Good Box Office Collection With Positive Response
Photo Credit:

பாசிடிவ் ரெஸ்பான்ஸ்: படத்தை ரிலீஸ்க்கு முன்னர் பார்த்த பிரபலங்கள் தொடங்கி, நேற்று ரிலீஸில் பார்த்த ரசிகர்கள் வரை பாசிடிவ்வான கருத்துக்களை சொல்லி வருகிறார்கள். இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் முதல் நாளே நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளதால், வார இறுதி நாட்களிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என படக்குழு நம்புகிறது. படம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் ரிலீஸ் செய்யப்பட்டது. திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. காட்சிகளும் அதிகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நடுத்தர வயதுடைய ரசிகர்கள் இது போன்ற படங்கள் அதிகம் வரவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்கள்.

முதல் நாள் வசூல் விபரம்: இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து சாக்.நிக் வலைதளம் தெரிவித்துள்ள தகவலின் படி, படம் முதல் நாளில் ரூபாய் ஒரு கோடி வசூல் செய்துள்ளது. முதல் நாளே ரூபாய் ஒரு கோடி வசூல் என்பது படக்குழுவினருக்கு திருப்தியைக் கொடுத்துள்ளது. மேலும் வார இறுதி நாட்களான இன்றும் நாளையும் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என படக்குழு நம்பிக்கையில் உள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் தரப்பில் இப்போது கிடைத்துள்ள ஆதரவு அடுத்த ஒரு வாரத்திற்கு தொடர்ந்தாலே படம் மிகப்பெரிய வசூல் வெற்றிப் படமாகவும் உருவெடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X