சரத்குமார், விக்ரமிடம் செய்த சேட்டை?.. தென்னந்தோப்பில் தேவயானியுடன் ராஜகுமாரன்.. சாத்திய சுப்ரீம் ஸ்டார்?

சென்னை: தேவயானியின் கணவர் ராஜகுமாரன்தான் கடந்த இரண்டு நாட்களாக சோஷியல் மீடியாவில் ட்ரோல் மெட்டீரியல் ஆகியிருக்கிறார். இயக்குநர் மகேந்திரன், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் பற்றி அவர் வாய்க்கு வந்ததை பேசிவைக்க அனைவருமே அவரை விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள். சூழல் இப்படி இருக்க பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தேவயானியின் கணவர் பற்றி பேசியிருக்கும் விஷயம் ஷாக்கை கொடுத்திருக்கிறது.

நடிகை தேவயானியின் கணவர் ராஜகுமாரன் விக்ரமனிடம் உதவி இயக்குநராக இருந்து தனது திரை பயணத்தை ஆரம்பித்தார். முதல் படமாக அவர் இயக்கிய நீ வருவாய் என சுமார் வரவேற்பைதான் பெற்றது. அடுத்ததாக சரத்குமார், விக்ரம், தேவயானி, குஷ்பூ உள்ளிட்டோரை வைத்து இயக்கிய விண்ணுக்கும் மண்ணுக்கும் படமும் படுதோல்வியை சந்தித்தது. அதனையடுத்து பெரிதாக படங்கள் எதுவும் இயக்கவில்லை.

செட்டிலான ராஜகுமாரன்: இதற்கிடையே முதல் படத்திலேயே தேவயானியை காதலிக்க ஆரம்பித்த அவர்; கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு தேவயானி தொடர்ந்து நடிக்க; ராஜகுமாரன் சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டார். அவ்வப்போது சில படங்களில் நடிகராக வலம் வந்த அவர்; சமீப காலமாக யூடியூப் சேனல்களுக்கு பேட்டிகள் கொடுப்பதை அதிகரித்திருக்கிறார்.

Sarathkumar Slapped Devayani s Husband Rajakumaran During Vinnukkum Mannukkum Shoot
Photo Credit:

ராஜகுமாரன் பேட்டி: அந்தவகையில் சில நாட்களுக்கு முன்பு அவர் கொடுத்த ஒரு பேட்டியில், ""ராம நாராயணன் 100 படங்களுக்கு மேல் செய்திருக்கிறார். ஆனால் ஒன்று இரண்டு படங்கள் இயக்கிய மகேந்திரனை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். ஆனால் நான் மகேந்திரனின் ஒரு படத்தைக்கூட பார்த்ததில்லை. அவர் படங்களை பார்ப்பதற்கு எனக்கு விருப்பமுமில்லை.

கமல் பெரிய நடிகர் இல்லை: சமீபத்தில்தான் உதிரிப்பூக்கள் படம் பார்த்தேன். அதில் ஒன்றும் பெரிதாக இல்லை. ஒரு சாதாரண படம் அவ்வளவுதான். கிழக்கே போகும் ரயில் படத்தில் ஒரு பிட்டு கதைதான் அந்த ஒட்டுமொத்த படமும். மனைவியின் தங்கையை தன் மனைவியாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் முழு பட கதையே. இது ஒரு பெரிய விஷயமா?.. அதற்காகவா இரண்டரை மணி நேரம்?" என்று கூறியிருந்தார். அதுமட்டுமின்றி அமிதாப் பச்சன் அளவுக்கு கமல்ஹாசன் ஒன்றும் பெரிய நடிகர் இல்லை என்றும் பேசினார்.

செய்யாறு பாலு வீடியோ: ராஜகுமாரனின் இந்தப் பேட்டி அவருக்கு பலத்த ட்ரோல்களை சம்பாதித்து கொடுத்திருக்கிறது. தேவயானியின் பெயரை கெடுப்பதற்காகவே அவர் இப்படி பேட்டி கொடுத்துவருவதாகவும் பலர் சொல்கிறார்கள். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு இவ்விவகாரம் குறித்து தனது யூடியூப் சேனலில் பேசியிருக்கிறார். அந்த வீடியோவில் அவர், "ஒருமுறை தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியிடம் அவரது நண்பர் ஒருவர், 'தேவயானி - ராஜகுமாரன் திருமணத்துக்கு போகவில்லையா' என்று கேட்டார். அதற்கு அவரோ, 'அவங்க கல்யாணத்துக்கு முன்னரே நான் 6 கோடி ரூபாய் மொய் எழுதிவிட்டேன்' என கூறியிருக்கிறார்.

ராஜகுமாரன் செய்த சேட்டை: விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தின் பட்ஜெட்டைத்தான் அவர் அப்படி சொன்னார். அந்தப் படம் பைசா பிரோயஜனம் இல்லாமல் போய்விட்டது. அந்தப் படத்தில் சரத்குமாரையும், விக்ரமையும் அழைத்துவந்து ஷாட்டே எடுக்காமல் சும்மா உட்கார வைத்திருந்தாராம். ஒருமுறை இதை பொறுக்காத சரத்குமார் ஒரு உதவி இயக்குநரிடம் எங்கே உங்கள் இயக்குநர் என கேட்க; அவர் கையை காண்பித்த திசையில் ஒரு தென்னந்தோப்பு இருந்திருக்கிறது. அதில் தேவயானியை வைத்து மட்டும் ஷூட் செய்துகொண்டிருந்திருக்கிறார். இதனால் டென்ஷனான சரத், 'என்ன செய்றீங்க' என கேட்டாராம். அதற்கு ராஜகுமாரனோ, 'இல்லை சார் மேடமை வைத்து ஷூட் செய்கிறேன்' என சொல்ல சரத்குமார் இரண்டு அறை விட்டதாகவும் சொல்வார்கள். அவர் ஏன் இப்போது வாய்க்கு வந்ததை பேசுகிறார் என தெரியவில்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X