வரலக்ஷ்மியை தொடர்ந்து இன்னொரு வாரிசும் என்ட்ரி.. சரத்குமார் மகன் ராகுலின் ராப் பாடல் ரிலீஸ்!
சென்னை: நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா சரத்குமாரின் மகன் ராகுல், ராப் சிங்கராக அறிமுகமாகி உள்ளார்.
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ள நடிகர் சரத்குமார், இன்னமும் பல சினிமாக்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.

அதே போல நடிகை ராதிகா சரத்குமாரும், அம்மா வேடங்களிலும், சித்தி 2 சீரியலிலும் கலக்கி வருகிறார்.
சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி சரத்குமார், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி பல படங்களில் நடித்து வருகிறார்.
நேற்று அவர் நடிப்பில் வெளியான, வெல்வெட் நகரம் திரைப்படமும் திரைக்கு வந்தது.
இந்நிலையில், சரத்குமார் மற்றும் ராதிகாவின் மகனான ராகுல் சரத்குமார், ரா-சன் எனும் பெயரோடு ராப் இசை கலைஞராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையில், ராகுல் சரத்குமார் Ra-Sun Take Off எனும் தனது முதல் ஆல்பம் பாடலை வெளியிட்டுள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தில் சுந்தர சோழ மகாராஜனாக நடித்து வரும் நடிகர் சரத்குமார், நீண்ட தாடி கெட்டப்புடன், ஸ்ரீகாந்த் தேவா ஸ்டூடியோவுக்கு வந்திருந்து தனது மகனின் திரை பிரவேசத்தை தொடங்கி வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











