திருமண செலவு 800 கோடியா? வீடு வீடாக பேப்பர் போட்டு வளர்ந்தவன் நான்.. சரத்குமார் விளக்கம்!
சென்னை: மும்பையில் மிகப்பெரும் தொழிலதிபராக இருக்கும் நிக்கோலாய் என்பவரை சரத்குமாரின் மகள் வரலட்சுமி தற்போது கரம்பிடித்துள்ளார். மிகவும் பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணம் குறித்தும், அதற்காக நடந்த செலவு குறித்தும் இணையத்தில் பேச்சுக்கள் அடிப்பட்டு வரும் நிலையில், நடிகர் சரத்குமார் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
மிகப்பெரும் பணக்காரர்களுள் ஒருவரான நிக்கோலாய் சச்தேவ் மும்பையில் சொந்தமாக ஆர்ட் கேலரி ஒன்றை நடத்தி வருகிறார். இதன் மூலம் அவருக்கு கிட்டத்தட்ட 900 கோடிக்கு சொத்து இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்டவருக்கு வரலட்சுமி இரண்டாவது மனைவியாகி இருக்கிறார். திருமணம் ஆகி விவாகரத்தான நிக்கோலாய்க்கு 15 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். தற்போது நிக்கோலாய்க்கு 41 வயது ஆன போதும், அவர் பார்ப்பதற்கு இளமையாகவே இருக்கிறார்.

வரலட்சுமி திருமணம்: இவர்களின் திருமண கொண்டாட்டம் ஒரு வாரத்திற்கு மேலாக நடந்தது, ஹல்தி பங்ஷனில் சரத்குமார், ராதிகா இருவரும் சேர்ந்து ரௌடி பேபி பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு இருந்தார்கள். இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவியது. இதைத் தொடர்ந்து திருமணம் தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்றது. அதற்காக அவர் பல கோடிகளை செலவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை தாஜ் ஹோட்டலில் மீண்டும் திருமணம் நடந்தது. அதன் பின் லீலா பேலஸ் ஹோட்டலில் இவர்களின் ரிசப்ஷன் ஆடம்பரமாக நடைபெற்றது.
வாழ்த்திய பிரபலங்கள்: இதில் முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா, கன்னட திரை உலகின் முன்னணி நடிகர் கிச்சா சுதீப், சித்தார்த், ராதா ரவி, கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என ஒட்டுமொத்த தென்னிந்திய பிரபலங்களும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமண செலவு 800 கோடியா?: இதில் ஆச்சரியப்பட கூடிய விஷயம் என்னவென்றால் நிக்கோலாய் தன் மனைவிக்கு தங்க செருப்பு, வைர சேலையை பரிசளித்தாகவும் இவற்றின் மதிப்பு மட்டும் ரூ 200 கோடி என்றும், ஆக வரலட்சமி, நிக்கோலாய் திருமணத்திற்கான செலவு மட்டும் ரூ 800 என்று இணையத்தில் பல செய்திகள் கடந்த சில நாட்களாகன பரவி வருகின்றனர். இதற்கு விளக்கம் கொடுத்த சரத்குமார், தன்னுடைய மகள் வரலட்சுமி திருமணத்துக்கு நான் 800 கோடி ரூபாய் செலவு செய்ததாக யூடியூப்பில் செய்தியை பரப்பி வருகிறார்கள். அவ்வளவு பணம் எங்கே இருக்கிறது என்று எனக்கே தெரியவில்லை. அப்படி பரவும் செய்தி முற்றிலும் தவறானது. எதுவுமே தெரியாமல் ஒரு தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.
மூட்டை தூக்கி பிழைத்துக் கொள்வேன்: இந்த வயதிலும் நான் திடமாக இருக்கிறேன் என்றால் சுத்தமான பழக்கவழக்கங்கள் தான் அதற்கு காரணம். வீடு வீடாக பேப்பர் போட்டு வளர்ந்தவன் நான். உங்களால் வளர்க்கப்பட்டவன். இப்போது விட்டால் கூட நான் மூட்டை தூக்கி பிழைத்துக் கொள்வேன். இன்றைய இளைஞர்கள் குடி, கஞ்சா போன்ற போதைக்கு அடிமையாகி இருக்கிறார்கள். அதற்கு காரணம் இந்த அரசு என விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக கூட்டணியை சேர்ந்த பாமக வேட்பாளரை ஆதரித்து விக்கிரவாண்டி பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் செய்த போது பேசி இருந்தார் சரத்குமார்.


Click it and Unblock the Notifications











