முதல் மனைவி குழந்தைங்க எல்லோரும் ஒன்றாகத்தான் இருக்கோம்.. சரத்குமார் ஓபன் டாக்

சென்னை: பத்திரிகையாளராக தனது பணியினை தொடங்கிய சரத்குமார் மிஸ்டர் மெட்ராஸ் பட்டத்தை கல்லூரி படிக்கும்போது பெற்றார். அதனையடுத்து சினிமாவில் வில்லனாக அறிமுகமான அவர் அதற்கு பிறகு ஹீரோவாக மாறினார். ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்த அவர் அரசியல்வாதியாகவும் மின்னியவர். அவரது மகள் வரலட்சுமியும் தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்தச் சூழலில் சரத்குமார் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

கல்லூரி படிக்கும்போது மிஸ்டர் மெட்ராஸ் என ஆணழகன் பட்டத்தை வென்றவர் சரத்குமார். அதற்கு பிறகு பத்திரிகையாளராக பணியை செய்த அவருக்கு சினிமா ஆசை வந்ததால் அந்தப் பணியை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தார். ஆனால் சினிமா அவருக்கு எளிதாக எதையும் கொடுத்துவிடவில்லை. ஆரம்பத்தில் வில்லனாக நடிக்க ஆரம்பித்து பிறகு ஹீரோவானார். அவரும் கோலிவுட்டில் குறிப்பிடத்தகுந்த ஹீரோ என்ற பெயரை பெற்றவர் என்பது கவனிக்கத்தது.

sarathkumar radhika varalakshmi

இரண்டு திருமணங்கள்: நடிப்பில் மட்டுமின்றி அரசியலிலும் பிஸியாக இருந்த அவருக்கு மொத்தம் இரண்டு திருமணங்கள் நடைபெற்றது. முதல் மனைவியான சாயாவை விவாகரத்து பெற்று பிரிந்த அவர் அடுத்ததாக ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். சரத்குமாருக்கும் சாயாவுக்கும் பிறந்தவர்தான் நடிகை வரலட்சுமி. அவரும் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். சமீபத்தில்தான் அவருக்கு திருமணம் முடிந்தது.

சரத்குமார் பேட்டி: இந்நிலையில் சரத்குமார் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல விஷயங்களை பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "எனக்கு 70 வயதாகிவிட்டது. இருந்தாலும் நான் இன்னமும் இளமையாக இருப்பதற்கு ஒரே காரணம் எனது ஜீன் மட்டுமே. உடல் ஆரோக்கியம் ரொம்பவே முக்கியம் என்று எனது தந்தை சின்ன வயதிலிருந்தே எனக்கு சொல்லி கொடுத்திருக்கிறார். இதனால் இன்னமும் நான் ஒர்க் அவுட் செய்துகொண்டுதான் இருக்கிறேன்.

எப்படி செய்கிறோம்: திருமணம் ஆவதோ இல்லை விவாகரத்து பெறுவதோ இல்லை விவாகரத்துக்கு பிறகு இன்னொரு திருமணம் செய்கிறோமோ அதெல்லாம் எந்த முறையில் செய்கிறோம் என்பதுதான் இங்கு முக்கியம். நான் முதல் மனைவியை பிரிந்து இரண்டாவது திருமணம் செய்திருக்கிறேன். மனம் ஒத்துதான் பிரிந்தோம். அப்படி எத்தனையோ பேர் இதுவரை பிரிந்திருக்கிறார்கள். மீண்டும் அவர்கள் சேர்ந்திருக்கிறார்கள்.

ஒன்றாகத்தான் இருக்கிறோம்: நான் முதல் மனைவியை பிரிந்து ராதிகாவை திருமணம் செய்துகொண்டாலும் என்னுடைய முதல் மனைவி, குழந்தைகள் எல்லாம் ஒன்றாக ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். என்னுடைய முதல் மனைவி எங்களுடன் இருப்பதால் இரண்டாவது மனைவி எந்தவிதமான அசௌகரியத்தையும் உணரவில்லை என்பதே உண்மை. இன்னும் சொல்லப்போனால் ராதிகா எனக்கு நிறைய உதவிகள் செய்தார். சரத்குமாருக்கு மகள் என்றால் அவர் எனக்கும்தான் மகள் என்று கூறினார். அதனையடுத்து வரலட்சுமியின் திருமணத்தில் சாயாவும் கலந்துகொண்டார். ராதிகா முழு ஒத்துழைப்பு கொடுத்தார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X