நெப்போலியன் மகன் திருமணம்.. அதுக்குள்ள டைவர்ஸ் பத்தி பேசுறீங்க.. கடுப்பான சரத்குமார்!

சென்னை: நெப்போலியனின் மகன் தனுஷ் மற்றும் அக்ஷயாவின் திருமணம் கடந்த மாதம் 7ந் தேதி நடைபெற்றது. இந்த திருமணத்தில், ராதிகா, சரத்குமார், மீனா, குஷ்பு, கலா மாஸ்டர் என பலர் கலந்து கொண்டனர். இந்த திருமணம் குறித்து பல விதமான விமர்சனங்கள் பரவிய நிலையில் இது குறித்து சரத்குமார் பேட்டி அளித்துள்ளார்.

அதில் தனுஷின் திருமணம் குறித்து விமர்சனம் செய்தவர்களுக்கு முதலில் நெப்போலியன் யார் என்று தெரியுமா? இல்லை தனுஷ் யார் என்று தெரியுமா? எனக்கு தனுஷின் உடல்நடை குறித்து நன்றாக தெரியும் இதை, நெப்போலியன் தனது மகனின் உடல் நிலைகுறித்து என்னிடம் சொல்லி இருக்கிறார். அதை எத்தனை பேரிடம் சொல்லி இருக்கிறார் என்று தெரியாது. ஆனால், நெப்போலியன் என்னிடம் சொன்ன போது,

napoleon dhanush sarathkumar

தனுஷ் இன்னும் சில ஆண்டுகாலம் தான் உயிரோடு இருப்பார் என்று கூறினார். இதைக்கேட்டு நானே மிகவும் கலங்கிய போது, ஒரு பெற்றோராக அவரின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

நெப்போலியன் மகன்: ஆனால் மகனின் வாழ்க்கைக்காக அனைத்தையும் விட்டுவிட்டு, அவரின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இங்கிருந்த அனைத்தையும் விட்டுவிட்டு மகனுக்காக அமெரிக்காவிற்கு சென்று அங்கு மகனின் உடல்நிலையை நன்றாக கவனித்து வருகிறார். இன்றைய நாள் வரைக்கும் மகனுக்காக அவர் செய்யாத விஷயங்களே இல்லை, ஒரு தந்தையாக அனைத்தையும் நெப்போலியன் செய்துவிட்டார்.

வேதனையாக இருக்கிறது: அப்படி இருக்கும் போது தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார், அதை அவர் செய்து இருக்கிறார். அக்ஷயாவிற்கு விருப்பம் இல்லாமல் அந்த திருமணம் நடக்கவில்லை. அந்த பெண்ணின் விருப்பத்தோடு தான், சம்மதத்தோடு தான் திருமணம் நடந்திருக்கிறது. அப்படி இருக்கும்போது அனைத்தையும் தெரிந்தது போல, சிலர் ஊடகங்களில் பேசுவதை பார்க்கும் போதும், அவர்கள் ட்ரோல் செய்வதை பார்க்கும் போதும் மிகவும் கோபமாக தான் வருகிறது.

அடுத்தவர்களின் விஷயத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து விமர்சனம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டது. அதை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. ஒரு நடிகராக, ஒரு பிரபலமாக இருந்து விட்டால் அவருக்கு என்று தனியாக எந்த விதமான சந்தோஷங்களும் இருக்கக் கூடாதா? இதுபோன்று விமர்சனம் செய்பவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசக்கூடாது என்ற அறிவு இருக்க வேண்டும்.

அறிவு இருக்கா: இப்போது ஏ.ஆர். ரகுமானின் மனைவி விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் அது அவருடைய தனிப்பட்ட முடிவு, அவர்கள் எந்த காரணத்திற்காகவும் பிரிய முடிவு செய்து இருக்கலாம் அது அவர்களின் தனிப்பட்ட முடிவு. அவர் எதற்காகத்தான் விவாகரத்து செய்கிறார்கள், அதற்காகத்தான் விவாகரத்தை செய்கிறார் என்ற ஆராய்ச்சி செய்வதற்கு இவர்கள் யார்? விவாகரத்து என்பது சினிமா பிரபலங்களுங்களுக்கு மட்டும் தான் நடக்கின்றதா? அனைவருக்கும் நடக்கிறது எத்தனை விவகாரத்துகள் நடக்கிறது என்பதை குடும்ப நல நீதிமன்றத்திற்கு சென்று பார்க்க வேண்டும். செலபிரிட்டியாக இருப்பதற்கான எங்களை விமர்சனம் செய்வது என்பது நியாயம் இல்லாத ஒன்று, நான் இதுபோன்ற ட்ரோல்களை எல்லாம் கண்டு கொள்ளவே மாட்டேன் என்று சரத்குமார் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X