வெப்சீரிஸ் ஷூட்டிங்.. ஐதராபாத் சென்ற நடிகர் சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு.. தீவிர சிகிச்சை!

By

சென்னை: நடிகர் சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.79 கோடியாக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் 6 கோடியே 79 லட்சத்து 34 ஆயிரத்து 939 பேர் இந்த தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறைந்து வருகிறது

குறைந்து வருகிறது

இந்தியாவிலும் இந்தப் பாதிப்பு அதிகமாக இருந்தது. மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா பரவல், கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக, கொரோனா பரவல் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

மலைகா அரோரா

மலைகா அரோரா

இந்த கொரோனா பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா அர்ஜுன், நிக்கி கல்ராணி, ஜெனிலியா, தமன்னா, இயக்குனர் ராஜமவுலி, மலைகா அரோரா, அர்ஜுன் கபூர், விஷால், பிருத்விராஜ் உள்பட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமாகி மீண்டனர்.

ஜக் ஜக் ஜீயோ

ஜக் ஜக் ஜீயோ

சமீபத்தில், ஜக் ஜக் ஜீயோ பட ஷூட்டிங்கில் பங்கேற்ற இந்தி நடிகர் வருண் தாவன், நடிகை நீது கபூர், இயக்குனர் ராஜ்மேத்தா ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிரபல நடிகர் சரத்குமாரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஐதராபாத் ஷூட்டிங்

ஐதராபாத் ஷூட்டிங்

வெப்சீரிஸ் ஒன்றில் படப்பிடிப்புக்காக, நடிகர் சரத்குமார் ஐதராபாத் சென்றிருந்தார். அதன் ஷூட்டிங் நேற்றோடு முடிந்தது. இன்று அவர் சென்னைத் திரும்பி இருக்க வேண்டும். இந்நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்து பார்த்தபோது, கொரோனா பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

ராதிகா சரத்குமார்

இதையடுத்து அவர் ஐதராபாத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதை சரத்குமார் மகள் வரலட்சுமியும் மனைவி ராதிகாவும் ட்விட்ட்ரில் தெரிவித்துள்ளனர். நடிகை ராதிகா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஐதராபாத்தில் கொரோனா பரிசோதனை செய்த போது சரத்குமாருக்கு உறுதியானது.

கொரோனா உறுதி

அவருக்கு அறிகுறி ஏதும் இல்லை என்றாலும் சிறந்த மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். வரும் நாட்களில் அவரது உடல்நிலை குறித்து தெரியப்படுத்துகிறேன் என்று கூறியுள்ளார். சரத்குமாரின் மகள் வரலட்சுமி, அப்பாவுக்கு கொரோனா உறுதியாகிவிட்டது. அவர் ஐதராபாத்தில் இருக்கிறார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X