கொரோனாவால் பாதிப்பு.. டிஸ்சார்ஜ் ஆகிறார் நடிகர் சரத்குமார்.. நடிகை வரலட்சுமி தகவல்!
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சரத்குமார் இன்று டிஸ்சார்ஜ் ஆவதாக வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.

சுகாதாரத்துறை
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த தொற்று காரணமாக ஏராளமான சினிமா பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நடிகர் சரத்குமாரும் பாதிக்கப்பட்டு இருந்தார்.

கொரோனா பாதிப்பு
வெப்சீரிஸ் ஒன்றின் படப்பிடிப்புக்காக, ஐதராபாத் சென்றிருந்த சரத்குமார். அதன் ஷூட்டிங் முடிந்து திரும்ப இருந்த நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதை சரத்குமார் மகள் வரலட்சுமியும் மனைவி ராதிகாவும் ட்விட்டரில் தெரிவித்திருந்தனர்.

அறிகுறி இல்லை
நடிகை ராதிகா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ஐதராபாத்தில் கொரோனா பரிசோதனை செய்த போது சரத்குமாருக்கு உறுதியானது. அவருக்கு அறிகுறி ஏதும் இல்லை என்றாலும் சிறந்த மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். வரும் நாட்களில் அவரது உடல்நிலை குறித்து தெரியப்படுத்துகிறேன் என்று கூறியிருந்தார்.

டிஸ்சார்ஜ் ஆகிறார்
இந்நிலையில், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக, சரத்குமார் மகள் வரலட்சுமி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பா டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். வீட்டில் 10 நாட்களுக்கு தனிமையில் சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

வலிமையை மீட்க
கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதால் அவர் வலிமையை மீட்டெடுக்க அடுத்த 15 நாள் கவனமாக இருக்க வேண்டும்' என்று கூறியுள்ள வரலட்சுமி, அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், செவிலியர்கள், மற்றும் கட்சித் தொண்டர்கள், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பாக இருங்கள்
கொரோனாவுக்கு எதிராக அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்று மக்களுக்குத் தெரிவித்துள்ள அவர், முக கவசம் அணிந்து வெளியில் செல்லுங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள், பாதுகாப்பாக இருங்கள் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications