வழக்கமான பரிசோதனை தான்… கேப்டன் நலமுடன் இருக்கிறார்… சரத்குமார் ட்வீட் !

சென்னை : தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமாக இருக்கிறார் என்று நடிகர் சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வழக்கமாக மேற்கொள்ளும் பரிசோதனைக்காகத்தான் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என்றும் நடிகர் சரத்குமார் அதில் குறிப்பிட்டுள்ளார்.

போட்டியிடவில்லை

போட்டியிடவில்லை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டதால், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். கட்சி நடவடிக்கைகளை அவரின் குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கூட அவர் போட்டியிடவில்லை.

அனுமதிக்கப்பட்டார்

அனுமதிக்கப்பட்டார்

இன்று அதிகாலை 3 மணி அளவில் விஜயகாந்த் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.இதையடுத்து சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக தகவல்கள் வேகமாக பரவின.

வதந்தியை நம்பவேண்டாம்

வதந்தியை நம்பவேண்டாம்

தேமுதிக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், விஜயகாந்த் அவர்கள் வழக்கமாக மேற்கொள்ளும் பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தேவையின்றி பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியிருந்தது.

கேப்டன் நலமாக இருக்கிறார்

இந்நிலையில், நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அன்பு நண்பர் திரு.விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி வெளியான நிலையில், தேமுதிக துணை செயலாளர் திரு.L.K.சுதீஷ் அவர்களை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன் . கேப்டன் அவர்கள் வழக்கமாக மேற்கொள்ளும் பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவர் நலமுடன் உள்ளார் என சுதீஷ் தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என சரத் குமார் கூறியுள்ள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X