டேய் எங்கடா இருந்தீங்க.. விஜய்யை சூப்பர் ஸ்டார்னு சொன்ன சரத்குமாரா இப்படி கிழிக்கிறாரு.. வாட் ப்ரோ!

சென்னை: அரசியல்னு வந்துட்டா இதெல்லாம் சாதாரணம்ப்பா எனும் வசனம் தான் நெட்டிசன்களுக்கு சரத்குமாரின் பேச்சை கேட்டதுமே நினைவுக்கு வந்து போகிறது. வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யை சூப்பர் ஸ்டார் என அந்த படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்த சரத்குமார் பேசியது தான் விஜய் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் காக்கா - கழுகு சண்டையையே பற்ற வைத்தது.

காக்கா காக்கான்னு தான் கத்தும் என வடிவேலு ஏற்கனவே விஜய்யை மறைமுகமாக அட்டாக் செய்ய ஆரம்பித்துவிட்டார் என நேற்று முழுவதும் வடிவேலுவை ப்ளூ சட்டை மாறன் முதல் விஜய் ரசிகர்கள் வரை ட்ரோல் செய்தனர்.

Vijay Sarathkumar TVK

இந்நிலையில், அடுத்ததாக சரத்குமார் களத்தில் இறங்கி விஜய்யை நேரடியாகவே தாக்கி பேசியிருப்பது தளபதி ரசிகர்களை பயங்கர கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. பேசாம அரசியலுக்கு செல்லாமல் விஜய் அடுத்தடுத்த படங்களிலேயே நடித்துக் கொண்டிருந்தால் நல்லா இருந்திருக்குமே என்றும் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

என்னடா சம்பவம் செஞ்சாங்க: மத்திய அரசும் மாநில அரசும் ஹாஷ்டேக் போட்டு எல்கேஜி பசங்க போல விளையாடுறாங்க, அங்க நம்ம பசங்க ஒரு ஹாஷ்டேக் போட்டு சம்பவம் செஞ்சாங்க என விஜய் பேசியதை குறிப்பிட்ட சரத்குமார், சினிமாவில் சம்பவம் செய்தார்கள் என்றால் படத்தில் யாரையாவது கொன்றார்கள் என அர்த்தம். என்னடா சம்பவம் செஞ்சாங்க என டைரக்ட்டாகவே தவெக தலைவர் விஜய்யை தாக்கி அரசியல் மேடையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரசாந்த் கிஷோர் எதுக்கு?: விஜய் எதையும் தெரிந்துக் கொண்டு பேச வேண்டும். அன்பு சகோதரர் விஜய் அவர்கள் ரொம்பவே பாப்புலரான நடிகர் எனக்கூறிவிட்டு, பிரசாந்த் கிஷோர் இந்தி தெரியாத ஒருத்தர், இல்ல.. உனக்கு வந்து அரசியல் வியூகத்தை வகுத்துக் கொடுக்க இந்தி தெரிந்த ஒருத்தர் வந்து உனக்கு சொல்லிக் கொடுக்க வேண்டுமா டேய்.. எங்கடா இருக்கீங்க நீங்களாம்.. யாருக்கிட்டடா ஃபிராடுத்தனம் பண்றீங்க.. வாட் ப்ரோ.. வொய் ப்ரோ.. என விஜய்யை மேடையில் ஒருமையில் பேசி டோட்டலாக விளாசித்தள்ளிவிட்டார் சரத்குமார். மேலும், சொந்த தொகுதியிலேயே தோற்ற பிரசாந்த் கிஷோர் விஜய்யை எப்படி ஜெயிக்க வைக்கிறார் என்பதை பார்க்கலாம். பிரசாந்த் கிஷோர் திமுகவை ஜெயிக்க வைத்தது போல விஜய் கட்சியை ஜெயிக்க வைப்பாரா? வரும் தேர்தலில் அதையும் பார்த்துவிடுவோம் என சரத்குமார் பேச, பாஜகவினர் ஹேப்பியாகிவிட்டனர்.

சூப்பர் ஸ்டார்னு சொன்னவரா இப்படி?: அரசியல் என வந்துவிட்டால் அண்ணன் தம்பி என்றோ அப்பா புள்ளையென்றோ பார்க்க மாட்ட்டார்கள் என சொல்வார்கள். அது விஜய் விஷயத்தில் இவ்வளவு சீக்கிரத்தில் நடக்கும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். வாரிசு படத்தின் ஆடியோ லாஞ்சில் விஜய்யை சூப்பர் ஸ்டார் என சொன்ன அதே சரத்குமார் தான் இப்படி வாடா போடா ரேஞ்சுக்கு பேசி பங்கமாக கலாய்த்துள்ளார் என நெட்டிசன்கள் சரத்குமாரின் பேச்சை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். 2026ம் ஆண்டு தேர்தலில் விஜய் களமிறங்க உள்ள நிலையில், அவருக்கு எதிராக இன்னும் எத்தனை நடிகர்கள் என்னவெல்லாம் பேசப் போகின்றனர் என்பது தெரியவில்லையே என்றும் திமுக, பாஜக என அனைத்து கட்சிகளும் ரவுண்டு கட்டி விளாச காத்திருக்கும் நிலையில், விஜய் இவர்களை எல்லாம் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதையும் காண ரசிகர்கள் வெயிட்டிங்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X