பணத்துக்காக இப்படி பண்ணலாமா?..சர்ச்சையில் சிக்கிய சரத்குமார் !

சென்னை : நடிகர் சரத்குமார் ரம்மி விளம்பரத்தில் நடித்தது சோஷியல் மீடியாவில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

தமிழ் சினிமாவில் துணை நடிகர், வில்லன் என படிப்படியாக நடித்து, கதாநாயகனாக நட்சத்திர அந்தஸ்தைப் பிடித்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நடிகராக வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார் சரத்குமார்.

விளையாட்டிலும்,உடல் பயிற்சியிலும் ஆர்வம் கொண்ட சரத்குமார் கட்டுக்கோப்பான உடலமைப்பைப் பேணுவதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இவருக்கு, 67 வயதாகிறது என்று சொன்னால் தான் தெரியும் அந்த அளவுக்கு உடலில் கவனம் செலுத்தி வருகிறார்.

சுப்ரீம் ஸ்டார்

சுப்ரீம் ஸ்டார்

ரசிகர்களால் அன்போடு சுப்ரீம் ஸ்டார் என்று அன்புடன் அழைக்கப்படும் சரத்குமார், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல் பிரமுகர் என பன்முகத் தன்மைக் கொண்டு இருக்கிறார். இவர் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் உருவான 'புலன் விசாரணை' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தில் மூலமே தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார் சரத்குமார்.

வாரிசு படத்தில்

வாரிசு படத்தில்

சரத்குமார் சினிமாவில் நுழைந்து முப்பது ஆண்டுகளை கடந்துள்ள நிலையிலும், அதே உத்வேகத்துடன் சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது, நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு திரைப்படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வரும் வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சர்ச்சையை கிளப்பிய விளம்பரம்

சர்ச்சையை கிளப்பிய விளம்பரம்

இந்நிலையில், நடிகர் சரத்குமார் ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் ரம்மி விளம்பரத்தில் நடித்துள்ளார். இது சோஷியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. லாட்டரி சீட்டு எப்படி அனைத்து வகையான மக்களின் உழைப்பை வாரிச் சுரண்டியதோ, அதன் நவீன வடிவம் தான் ஆன்லைன் ரம்மி விளையாட்டு. இந்த விளையாட்டை விளையாடி பலர் தங்களின் பணத்தை எல்லாம் இழந்து, என்ன செய்வது என்று தெரியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இந்த விளம்பரத்தில் நடிக்கலாமா ?

இந்த விளம்பரத்தில் நடிக்கலாமா ?

இதனால் பல தரப்பினரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடைசெய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நேரத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் எம்பி, எம்எல்ஏ என பல்வேறு பதவிகளை நீங்கள் வகித்துள்ளீர்கள், உங்களின் கருத்துக்கு இங்கே மதிப்பு உள்ளது. நீங்கள் இதுபோன்ற விளம்பரத்தில் நடித்தால் அது தவறான முன் உதாரணமாகிவிடும் என்று இணையவாசிகள் கூறியுள்ளனர்.

Recommended Video

Radhika என் அம்மா இல்லை, அப்பாவின் இரண்டாவது மனைவி | Varalakshmi Sarathkumar *Celebrity
சமுதாயத்தின் மீது அக்கறை இல்லை

சமுதாயத்தின் மீது அக்கறை இல்லை

மற்றொரு இணையவாசி, நடிகர்களே ரம்மி விளம்பரத்தில் நடிக்க மறுத்து வருகின்ற இந்த நேரத்தில், சரத்குமார் நடிகர் மட்டுமல்ல ஒரு கட்சியின் தலைவரும் கூட... கொஞ்சாமாவது சமுதாயத்தின் மீது அக்கறை இருந்தால் இதில் நடிச்சிருப்பாரா.? என பலர் இணையத்தில் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X