எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யட்டும் பிகில்… அரசியல் பிரபலம் வாழ்த்து!
விஜய்யின் பிகில் திரைப்படம் இந்த தீபாவளிக்கு மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகள் என நடிகரும் சமத்துவ கட்சி தலைவருமான சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று காலை வெளியாகியுள்ள பிகில் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள் என நடிகரும் சமத்துவ கட்சி தலைவருமான சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் இன்று காலை திட்டமிட்டபடி ரிலீசானது.
கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, ஆனந்தராஜ் என பலர் இந்த படத்தில் இருந்தாலும், ஒட்டுமொத்த படத்தையும் விஜய் ஒருவரே தாங்கி பிடித்திருக்கிறார்.

ஒன் மேன் ஆர்மி
பிகில் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு, ராயப்பன், பிகில் மற்றும் மைக்கேல் என மூன்று கெட்டப்புகள் இருப்பதால், மூன்று பேருக்குமான தனித்தனி மாஸ் இன்ட்ரோ காட்சிகள் மெர்சல் படத்தில் வைத்ததை போலவே பிகில் படத்திலும் வைக்கப்பட்டுள்ளது. எத்தனை நட்சத்திர நடிகர்கள் படத்தில் இருந்தாலும், விஜய் ஒட்டுமொத்த ஸ்க்ரீனையும் தனக்கான பிளே கிரவுண்டாக மாற்றி கோல் அடித்திருக்கிறார்.

நெகட்டிவிட்டி
வழக்கம் போல பிகில் திரைப்படத்திற்கும் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் இணையதளங்களில் காலை முதலே வந்த வண்ணம் இருக்கின்றன. பிகில் டிசாஸ்டர் எனும் ஹேஷ்டேகும் இந்தியளவில் அஜித் ரசிகர்களால் டிரெண்ட் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லை என்பதும், ஃபுட்பால் விளையாட்டு காட்சிகளில் கிராபிக்ஸ் சரியில்லை என்பதுமே அவர்கள் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகள்.
வாழ்த்து
பிகில் திரைப்படம் இந்த தீபாவளிக்கு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் அட்லிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பிகில் பூர்த்தி செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளார். சரத்குமாரின் ட்வீட்டுக்கு விஜய் ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

சர்கார்
கடந்த தீபாவளிக்கு விஜய்யின் சர்கார் திரைப்படம் வெளியானது. அந்த படத்தில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் விஜய்க்கு வில்லியாக நடித்திருந்தார். இந்நிலையில், இந்த தீபாவளிக்கு வெளியாகும் விஜய்யின் பிகில் திரைப்படத்திற்கு சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குநர் அட்லியுடன் அதிகாலையிலேயே நடிகை வரலட்சுமி சரத்குமார் படம் பார்த்துவிட்டு, படம் சூப்பராக உள்ளது எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











