என்னாது, சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் ஹீரோவாகிறாரா, ஹீரோயின் நயன்தாராவா?

By Siva

Recommended Video

ஹீரோவாக நடிக்கும் சரவணா அருள்.

சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணா அருளுக்கு ஒரு கதை பிடித்து அதில் ஹீரோவாக நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலேசியாவில் நடந்த நட்சத்திர கலைவிழாவுக்கு ஸ்பான்சர் செய்தார் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணா அருள். அப்போது அவரிடம் படங்களில் நடிப்பீர்களா என்று கேட்கப்பட்டது.

அவரும் நடிப்பேன் என்று பதில் அளித்திருந்தார்.

படம்

படம்

சரவணா அருளிடம் உதவி இயக்குனர் ஒருவர் கதை சொன்னாராம். அந்த கதை அண்ணாச்சிக்கு ரொம்ப பிடித்துள்ளதாம். அந்த படத்தில் அவர் ஹீரோவாக நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாயகி

நாயகி

சரவணா அருள் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

ஹீரோ

ஹீரோ

நயன்தாரா சும்மாவே டூயட் பாட மாட்டேன், கிளாமர் காட்ட மாட்டேன் என்று பல கன்டிஷன்கள் போடுகிறார். இந்நிலையில் அவர் சரவணா அருளுக்கு ஓகே சொல்வாரா என்பது தான் கேள்வி.

தமன்னா

தமன்னா

சரவணா அருளுடன் சேர்ந்து விளம்பரத்தில் நடித்துள்ள ஹன்சிகா அல்லது தமன்னாவை நடிக்க வைக்க முயற்சி செய்யலாமே. நிச்சயம் சம்மதிப்பார்கள் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

கமல்

கமல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன் அரசியலுக்கு செல்லும் நேரத்தில் சரவணா அருள் நடிக்க வருகிறார். நெட்டிசன்கள் ஏற்கனவே அவரை வருங்கால சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X