twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திகைப்பூட்டும் பல திருப்பங்கள்... பரபரப்பான வழக்கு… ராஜகோபால், ஜீவஜோதி கதை படமாகிறது !

    |

    சென்னை : ஜீவஜோதியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை பாலிவுட்டின் ஜங்க்லி பிக்சர்ஸ் திரைப்படமாக எடுக்க உள்ளது.

    இத்திரைப்படத்தை அனைத்து மொழிகளிலும் படமாக உருவாக உள்ளது, இதற்காக பிரபல திரைக்கதை ஆசிரியர் பவானி ஐயரை இந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

    மேலும், இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    என் வாழ்க்கை பட ஹீரோ இவர் தான்...சுரேஷ் ரெய்னாவின் மாஸ் பதில் என் வாழ்க்கை பட ஹீரோ இவர் தான்...சுரேஷ் ரெய்னாவின் மாஸ் பதில்

    முடிசூடா மன்னன்

    முடிசூடா மன்னன்

    1970களில் இறுதியில் சென்னை கேகே நகர் பகுதியில் சாதாரண மளிகை கடை முதலாளியாக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார் ராஜகோபால். பின்னர், 1982ம் ஆண்டு அதே பகுதியில் சரவணபவன் என்ற பெயரில் ஒரு உணவகத்தை தொடங்கி சுவையிலும் தரத்திலும் மக்களை கவர்ந்து முடிசூடா மன்னன் ஆனார் ராஜகோபால், முதலில் தமிழகம் அடுத்து உலகம் முழுவதும் பல கிளைகளை விரைவுப்படுத்தினார்.

    ஆயுள்தண்டனை

    ஆயுள்தண்டனை

    ராஜகோபால் அவர்களுக்கு இரண்டு மனைவிகள் மேலும் மூன்றாவதாக ஜீவஜோதியை மணந்து கொள்ள திட்டம் தீட்டினார். இதற்காக அவரது கணவர் சாந்தகுமாரை கொலை செய்தார். 18 வருடங்களாக நடந்த கொலை வழக்கில் ராஜகோபால் குற்றவாளி என ஆயுள்தண்டனை விதித்தது நீதிமன்றம்.

    காம ஆசையால்

    காம ஆசையால்

    இளம் வயதில் கடும் உழைப்பாளியாக இருந்து வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்து அனைவரும் பிரமிக்கும் வகையில் உயர்ந்து இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்த ராஜகோபால், முதுமையில் வயதுக்கு மீறிய காம ஆசையால், கொலை வழக்கில் சிக்கி இறுதியில் மாண்டே போனார்.

    ஜீவஜோதியின் வாழ்க்கை வரலாற்று

    ஜீவஜோதியின் வாழ்க்கை வரலாற்று

    இந்நிலையில், ஜீவஜோதியின் வாழ்க்கை வரலாற்றுத் படத்தை பாலிவுட்டின் ஜங்க்லி பிக்சர்ஸ் திரைப்படமாக எடுக்க உள்ளது. ஜீவஜோதி நடத்திய சட்டப்போராட்டத்தை மையப்படுத்தியும் அவர் சந்தித்த பல இன்னல்களையும் எடுத்துரைக்கும் திரைப்படமாக இப்படம் இருக்கும். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த கதையை அனைத்து மொழிகளிலும் படமாக உருவாக்கும் உரிமையை ஜங்க்லி நிறுவனம் பெற்றுள்ளது.

    18 ஆண்டுகால போராட்டம்

    தனது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாவதைப்பற்றி நினைக்கும் போது மனத்திற்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய 18 ஆண்டுகால போராட்டம், ஆணாதிக்கத்தின் மறு முகம், நான் அடைந்த மன வேதனை, வலியை இந்த படத்தின் மூலம் அனைவரும் உணர்வார்கள் என்று நான் நம்புகிறேன் என ஜீவஜோதி கூறினார்.

      Read more about: jeevajothi
      English summary
      Saravana bhavan rajagopal jeevajothi case story becomes movie
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X