லெஜன்ட் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி அருள்... இந்த கதாப்பாத்திரத்திலேயே நடிக்கிறார்?

சென்னை: சரவணா ஸ்டோர் அண்ணாச்சி நடிக்கும் கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் அவரது கடையின் விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

இளம் நடிகைகள் முதல் வெளிநாட்டு அழகிகள் வரை அழைத்து வந்து ஆடி வந்த அவர், தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.

ஜேடி ஜெரி இயக்கம்

ஜேடி ஜெரி இயக்கம்

இந்தப் படத்தை தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப் படங்களை எடுத்து வரும் இயக்குநர்கள் ஜேடி மற்றும் ஜெரி ஆகியோர் இயக்கி வருகின்றனர். இவர்கள் ஏற்கனவே உல்லாசம், விக்ரமாதித்யா, விசில் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளனர்.

லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு

லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு

இப்படத்தின் அறிவிப்பு கடந்த 2019ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக வெளியானது. அப்போதே படப்பிடிப்பும் தொடங்கிய நிலையில் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனது.

ஊர்வசி ரவுத்தேலா

ஊர்வசி ரவுத்தேலா

இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஹீரோயினாக நடிக்கிறார். நடிகர்கள் விவேக், ரோபோ ஷங்கர், விஜயகுமார் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

சண்டைக்காட்சி போட்டோஸ்

சண்டைக்காட்சி போட்டோஸ்

கொரோனா முதல் அலை குறைந்த பிறகு குலு, மணாலியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதேபோல் சரவணா ஸ்டோர் அருள் படத்தில் சண்டைக் காட்சியில் நடித்த போட்டோக்களும் வெளியாகி வைரலானது.

விஞ்ஞானியாக அருள்?

விஞ்ஞானியாக அருள்?

இந்நிலையில் படத்தில் அருள் நடிக்கும் கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சரவணன் அருள் இந்தப் படத்தில் விஞ்ஞானியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Read more about: saravana store movie arul character
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X