சூப்பர்ஸ்டாரோடு 'விளம்பர' ஸ்டார்... நட்சத்திர கிரிக்கெட் கோப்பையுடன் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர்!
Recommended Video

கோலாலம்பூர் : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக மலேசியாவில் நட்சத்திர கலைவிழா நடைபெற்று வருகிறது.
நாசர் தலைமையிலான குழு அளித்த முக்கிய வாக்குறுதியான நடிகர் சங்கம் கட்டடம் கட்டும் பணி, தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நடிகர் சங்கம் கட்டிட நிதி திரட்டுவதற்காக நடிகர் சங்கம் சார்பில் மலேசியாவில் விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் இன்றும், நாளையும் நடக்கிறது.

நட்சத்திர கலைவிழா
நட்சத்திர கலைவிழாவில் கலந்து கொள்வதற்காக 300-க்கும் மேற்பட்ட திரை நட்சத்திரங்கள் மலேசியா சென்றுள்ளனர். நடிகர் ரஜினிகாந்தும் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளார். கமல்ஹாசன் அமெரிக்காவில் இருந்து நேரடியாக மலேசியா வர இருக்கிறாராம்.

நட்சத்திர கிரிக்கெட் போட்டி
நேற்று கோலாலம்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நட்சத்திர விளையாட்டு வீரர்களின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. கிரிக்கெட் அணி வீரர்களின் அறிமுக நிகழ்ச்சியும், ஜெயம் ரவி - ஆர்யாவின் கால்பந்து அணியினரின் அறிமுக நிகழ்ச்சியும் நடந்தது.

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்
தொடர்ந்து மலேசிய உள்ளூர் கலைஞர்களின் கலைநிகழ்ச்சி மற்றும் பேஷன் ஷோ நடைபெற்றது. விழாவின் நிறைவாக நடிகர் ரஜினிகாந்தும், சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணனும் விளையாட்டு போட்டிகளுக்கான கோப்பையை அறிமுகம் செய்து வைத்தனர்.

தொகுப்பாளர் வெங்கட்பிரபு
நிகழ்ச்சியை வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், நடிகைகள் சங்கீதா, ரோகினி, சுஹாசினி, நடிகர் சுரேஷ் ஆகியோர் தொகுத்து வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஏ.சி.சண்முகம், ஐசரி கணேஷ், ரஜினி, லதா ரஜினி, சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன், மலேசிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











