அப்பாவாக போகிறேன்..8 வருஷத்திற்கு பிறகு குட்நியூஸ் சொன்ன..சரவணன் மீனாட்சி நடிகர்!

சென்னை : நடிகர் மிர்ச்சி செந்தில், தனது இன்ஸ்டாகிராம் அப்பாவாகப்போகும் மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்துள்ளார்,

ரேடியோ மிர்ச்சியில் ஆர்.ஜே.வாக கலக்கிய மிர்ச்சி செந்தில், விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் சீரியலில் என்ட்ரி கொடுத்தார். இந்த சீரியல் இல்லத்தரசிகளுக்கு பிடித்தமான சீரியலாக இருந்தது.

இத்தொடரில் இவருக்கு ஜோடியாக நடித்த ஶ்ரீஜாவை இவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

மிர்ச்சி செந்தில்

மிர்ச்சி செந்தில்

மிர்ச்சி செந்தில் ரேடியோ மிர்ச்சியில் ஆர்.ஜே.வாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தனது கலகலப்பான சுவாரசியமான பேச்சால் குறுகிய காலத்திலேயே இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உருவானது. இதையடுத்து, ராஜ்கிரண், சேரன் நடித்த தவமாய் தவமிருந்து படத்தில் சேரனின் அண்ணனாக அறிமுகமானார்.

சரவணன் மீனாட்சி

சரவணன் மீனாட்சி

இதையடுத்து,எவனோ ஒருவன், பப்பாளி, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், வெண்ணிலா வீடு போன்ற படங்களில் நடித்து வந்த செந்திலுக்கு விஜய் டிவி ஒரு சூப்பர் ஆஃபர் கொடுத்து அழைத்தது. ஆமாம், சரவணன் மீனாட்சி தொடரில் சரவணன் என்ற ரோலில் நடித்தார். அவருடன் நடிகை ஸ்ரீஜா நடித்திருந்தார். இந்த சீரியல் டீஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருந்தது.

காதல் திருமணம்

காதல் திருமணம்

இந்த சீரியலில் நடித்துக்கொண்டு இருக்கும் போதே செந்திலுக்கும் ஸ்ரீஜாவுக்கும் காதல் தீ பற்றிக்கொள்ள இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்னும் இருவரும் சேர்ந்து மாப்பிள்ளை என்கிற ஒரு சீரியலில நடித்தனர். தற்போது செந்தில் மட்டும் சீரியல்களில் நடித்து வருகிறார். ஸ்ரீஜா குடும்பத்தை கவனித்து வருகிறார்.

குட் நியூஸ்

குட் நியூஸ்

இந்நிலையில், மிர்ச்சி செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மனைவி ஸ்ரீஜாவின் வளைகாப்பு போட்டோவை பகிர்ந்து, விரைவில் இருவரும் பெற்றோர் ஆக உள்ள தகவலை, கூறியுள்ளார். இதை தொடர்ந்து, இவருக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். செந்தில் ஸ்ரீஜா இருவருக்கும் திருமணமாகி 8 வருடங்கள் ஆகும் நிலையில் நல்ல செய்தியை இருவரும் கூறியுள்ளனர்.

8 ஆண்டு ஏக்கம்

8 ஆண்டு ஏக்கம்

குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தில் 8 ஆண்டுகளாக இருந்து வந்த இந்த தம்பதிக்கு ஓரிரு மாதங்களில் அவர்களின் கைகளில் குழந்தை தவழ போகிறது. உண்மையில் இந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X