ஹீரோயினாக களமிறங்கும் ரச்சிதா மகாலட்சுமி… என்ன படம் தெரியுமா?

சென்னை : சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளுக்கு வெள்ளித்திரையில் பிரகாசமான எதிர்காலம் உண்டு. அந்த வரிசையில் சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா மகாலட்சுமியும் வலம் வர உள்ளார்.

தற்போது இவர், கன்னடத் திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

பிரிவோம் சந்திப்போம்

பிரிவோம் சந்திப்போம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் தனது அறிமுகத்தை கொடுத்தார் ரச்சிதா மகாலட்சுமி. இந்த தொடர் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. அந்த சீரியலில் உடன் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இளவரசி

இளவரசி

பிரிவோம் சந்திப்போம் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இளவரசி என்ற தொடரில் நடித்தார். இதில், சந்தோஷி, ஸ்ரீகர், வசந்த் ஆகியோருடன் ஒரு முக்கியமான ரோலில் நடித்தார் ரச்சிதா.

சரவணன் மீனாட்சி சீசன்1

சரவணன் மீனாட்சி சீசன்1

காதலை மையமாகக்கொண்டு உருவான சரவணன் மீனாட்சி சீசன் 1ல் மிர்ச்சி செந்தில், ஸ்ரீஜா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த சீரியலில் நடித்த மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

சரவணன் மீனாட்சி சீசன்2

சரவணன் மீனாட்சி சீசன்2

சரவணன் மீனாட்சி சீசன் 1 தொடரின் வெற்றியை அடுத்து, சரவணன் மீனாட்சி சீசன் 2 தொடங்கப்பட்டது. இதில் ரச்சிதா, தங்க மீனாட்சி கதாபாத்திரத்தில் கன கச்சிதமாக நடித்து அனைவரின் மனதிலும் தனி இடம் பிடித்தார். இதில் கவின் சரவணப்பெருமாள் வேடத்தில் நடித்திருப்பார். இவர்கள் இருவரின் காதல் மிகவும் ரசிக்கும் படி இருந்ததால், இந்த சீரியலுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில்

சரவணன் மீனாட்சி தொடரில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து ரிச்சிதா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் கில்லாடி, ஜூனியர் சினியர் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டார். நாச்சியார் என்ற தொடரிலும் நடித்தார்.

புடவையில்

புடவையில்

எத்தனை மார்டன் உடையில் எத்தனை பேர் வந்தாலும், புடவையில் வளைய வரும் ரச்சிதாவை அடிக்க ஆளே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏற்றி வைத்த குத்துவிளக்கு போல எப்போதும் புடவையில் தேவதைபோல் வலம் வரும் இவருக்கு சமூகவலைத்தள பக்கத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உண்டு.

நாம் இருவர் நமக்கு இருவர்

நாம் இருவர் நமக்கு இருவர்

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். இத்தொடர் இல்லத்தரசிகள் விரும்பும் தொடர்களில் ஒன்றாக உள்ளது.

வாணிபோஜன் பல படங்களில்

வாணிபோஜன் பல படங்களில்

வாணிபோஜன் ,பிரியா பவானி சங்கர் இவர்கள் இருவரும் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்று தற்போது ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துக்கொண்டு படு பிஸியாக நடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X