பிக் பாஸ் ஒதுக்கினாலும் நட்பை மறக்காத கவின், சாண்டி.. திரும்பவும் யார் போட்டோ போட்ருக்காங்க பாருங்க!

சரவணனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சாண்டி.

Recommended Video

Bigg Boss Kondattam : மேடையை தெறிக்க விடும் முகேன்,கவின் நடனம்

சென்னை: சரவணனை சந்தித்த போது எடுத்துக் கொண்ட மற்றொரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சாண்டி.

பிக் பாஸ் வீட்டில் சாண்டியும், கவினும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர் என்பது நமக்குத் தெரியும். ஆரம்பத்தில் அவர்களது கூட்டணியில் நடிகர் சரவணனும் இருந்தார். மூவரும் சேர்ந்தே பிக் பாஸ் வீட்டில் சுற்றி வந்தனர்.

ஆனால் திடீரென பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார் சரவணன். அவரது வெளியேற்றத்தின் போது சாண்டியும், கவினும் கதறிக் கதறி அழுதனர்.

சரவணன்

சரவணன்

பிக் பாஸ் இறுதி வாரத்தில் முன்னாள் போட்டியாளர்களை சிறப்பு விருந்தினர்களாக மீண்டும் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தனர். அப்போதும் சரவணனை அழைத்து வரவில்லை. பைனல்சுக்கும் அவர் வரவில்லை.

நேரில் சந்திப்பு

நேரில் சந்திப்பு

ஆனாலும் தங்களது நட்பை மறவாத சாண்டியும், கவினும் சேலத்தில் நேரடியாகச் சென்று சரவணனை சந்தித்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஏற்கனவே இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

குவியும் லைக்ஸ்

இந்நிலையில் சாண்டி மீண்டும் சரவணனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சரவணனின் மகனுடன் கவினும் உள்ளார். வெளியிடப்பட்டு இன்னும் 24 மணி நேரம்கூட ஆகாத நிலையில் இந்தப் புகைப்படத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேல் லைக்குகள் குவிந்து வருகின்றன.

பிக் பாஸ் கொண்டாட்டம்

பிக் பாஸ் கொண்டாட்டம்

கல்லூரி காலத்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறியதாலேயே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் சரவணன். தொடர்ந்து அவரை நிகழ்ச்சியின் எந்த விழாவுக்கும் அழைக்கவில்லை. பிக் பாஸ் கொண்டாட்டத்திலும்கூட அவர் கலந்து கொள்ளவில்லை.

வாழ்த்து

வாழ்த்து

பிக் பாஸ் வேண்டாமென்று ஒதுக்கினாலும் கூட தங்களது நட்பினால் தொடர்ந்து சரவணனுடைய புகைப்படத்தை கவினும், சாண்டியும் வெளியிட்டு வருகின்றனர். சித்தப்பு மீதான அவர்களது பாசத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதோடு சரவணனின் மகனையும் அழகாக இருப்பதாக வாழ்த்தி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X