உங்களை ஒருவர் காதலித்து கொல்லட்டும்: டாப்ஸிக்கு நெட்டிசன்ஸ் சாபம்
சென்னை: டாப்ஸி போட்ட ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு சாபம் விட்டுள்ளனர்.
கபிர் சிங் படத்தை இயக்கிய சந்தீப் வாங்கா ரெட்டி ஒரு ஆண் தான் காதலிக்கும் பெண்ணை நினைத்த நேரம் அறைய அல்லது முத்தமிட முடியவில்லை என்றால் அது காதலே இல்லை என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். அவரை பலரும் கடுமையாக விமர்சித்தார்கள்.
இந்நிலையில் செய்தி ஒன்றை பார்த்த நடிகை டாப்ஸி சந்தீப் வாங்கா ரெட்டியை கிண்டல் செய்து ட்வீட் போட்டுள்ளார்.
காதலன்
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 19 வயது காதலியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் காதலன் அவரை கொலை செய்து உடலை சாலையோரம் வீசிவிட்டு சென்றார். இந்த செய்தியை பார்த்த டாப்ஸி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, அவர்கள் உண்மையாக காதலித்தார்கள் அதனால் இந்த செயல் அந்த நபர் அப்பெண் மீது வைத்திருந்த உண்மை காதலை காட்டுகிறது என்று கூறலாமோ என்றார்.
சாபம்
ஒரு நாள் நீங்கள் இது போன்ற நபரை காதலித்து உங்களுக்கும் இதே கதி ஏற்படும் என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்கோ அல்லது வேறு யாருக்குமே இது போன்று நடக்காமல் கடவுள் காப்பாராக. அதனால் சும்மா இது போன்று பேசாதீர்கள் என்று நெட்டிசன்கள் டாப்ஸியை திட்டியுள்ளனர்.
இயக்குநர்
கபிர் சிங் இயக்குநரை குத்திக் காட்ட நிஜமான கொலையை பற்றி இப்படி கூற நீங்கள் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருப்பீர்கள் போன்று. இது போன்று உங்களுக்கும், உங்களின் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் நடக்க வேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்கிறேன் என்றெல்லாம் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
கிண்டல்
ஒரு இஸ்லாமியர் இந்து பெண்ணை கொலை செய்தார் என்பதால் தான் டாப்ஸி இப்படி நக்கலாக ட்வீட் போட்டுள்ளார். இதுவே உல்டாவாக நடந்திருந்தால் டாப்ஸி அமைதியாக இருந்திருப்பார் என்கிறார்கள் நெட்டிசன்கள். இதை பார்த்த டாப்ஸியோ, ஏளனம் என்பது பற்றி தெரியாதவர்கள் என் ட்வீட்டை கண்டுகொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











