Sardar 2: சைலண்டாக நடந்து முடிந்த சர்தார் 2 பூஜை... கார்த்தியின் ஜோடி யார்..? விரைவில் ஷூட்டிங்!

சென்னை: கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான ஜப்பான் திரைப்படம் நெகட்டிவான விமர்சனங்களை எதிர்கொண்டது. இதனையடுத்து ஒரேநேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்நிலையில் சர்தார் 2ம் பாகம் ஷூட்டிங்கும் விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்தார் 2-க்கு ரெடியான கார்த்தி
கார்த்தி நடிப்பில் 2022 தீபாவளி ஸ்பெஷலாக வெளியான திரைப்படம் சர்தார். பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் பக்கா கமர்சியல் ஜானரில் வெளியான சர்தார் படத்தில் ஸ்ட்ராங்கான சோஷியல் மெசேஜ்ஜும் இருந்தது. இதனால் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை ஓவர்டேக் செய்த சர்தார், பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூலித்தது. அப்போதே சர்தார் 2ம் பாகம் வரும் என்பதையும் படக்குழு அறிவித்தது.

 Sardar 2: Karthis Sardar 2 Official Pooja February 2nd Completed

சர்தார் முதல் பாகத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அவருடன் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, முனிஷ்காந்த், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்நிலையில் சர்தார் 2ம் பாகம் நிறைய மாற்றங்களுடன் உருவாகவுள்ளதாம். கார்த்தி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை பிஎஸ் மித்ரன் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. ஆனால் ஜிவி பிரகாஷுக்கு பதிலாக யுவன் சர்தார் 2வில் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார்.

அதேபோல் கார்த்தி ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என படக்குழு ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் ராஷி கண்ணா நடிக்க வாய்ப்பில்லை என்பது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. அதேநேரம் கார்த்தி ஜோடியாக முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சர்தார் 2ம் பாகத்திற்கான பூஜை கடந்த 2ம் தேதி நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் கார்த்தி, பிஎஸ் மித்ரன் உள்ளிட்ட படக்குழுவினர் மட்டும் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளில் பிஸியாகிவிட்ட இயக்குநர், விரைவில் படப்பிடிப்பை தொடங்க பிளான் செய்து வருகிறாராம். அதன்படி ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் சர்தார் 2 படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்தி தற்போது நடித்து வரும் இரண்டு படங்களின் படப்பிடிப்பும் பாதிக்கும் மேல் முடிந்துவிட்டது.

எனவே சர்தார் 2 படத்திற்காக கார்த்தியும் கால்ஷீட் கொடுத்துவிட்டாராம். சர்தார் 2 முடிந்த பின்னரே கைதி 2 படத்தில் நடிக்கவுள்ளாராம் கார்த்தி. லோகேஷ் கனகராஜ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார். அதற்குள் சர்தார் 2 படப்பிடிப்பை முடித்துவிட்டு கைதி 2ம் பாகத்தில் இணையலாம் என கார்த்தி பிளான் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X