சர்தார் 100 கோடி எல்லாம் சும்மா பித்தலாட்டம்..பயத்தில் ட்விட்டை அழித்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை : சர்தார் திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடியை வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அது சும்மா பித்தலாட்டம் என்று ட்வீட் போட்ட ப்ளூ சட்டை மாறன் அதை சில நிமிடங்களிலேயே அழித்து விட்டார்.

ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன் நாயகிகளாக நடித்துள்ள இப்படத்தில் கார்த்தி, தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் என்ற முக்கியமான ரோலில் நடித்திருந்தார். இப்படத்தில் கார்த்தியின் நடிப்பை அனைவரும் வியந்து பாராட்டினார்கள். மேலும் இப்படம், பாக்ஸ் ஆபிஸில் தாறுமாறான வசூலை நிகழ்த்திக் காட்டியது.

கார்த்தியின் சர்தார்

கார்த்தியின் சர்தார்

பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து, இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் நடிகர் கார்த்தியை வைத்து சர்தார் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இப்படம் தீபாவளி பாண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் வெளியானது. படத்தின் முதல் நாள் வசூல் சுமாராகவே இருந்தது. இதையடுத்து, தொடர் விடுமுறை இருந்ததால் திரையரங்கில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடியது.

ரூ100 கோடி வசூல்

ரூ100 கோடி வசூல்

சிவகார்த்திகேயன் பிரின்ஸ் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியான நிலையில், கார்த்தியின் சர்தார் படம் மட்டும் நல்ல வசூலை ஈட்டி அதிக தியேட்டர்களில் ஓடி உலக அளவில் ரூ.100 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் மிகப்பெரிய வசூலை குவித்துள்ளதால், விரைவில் சர்தார் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ப்ளு சட்டை மாறன் சார் பயமா?

ப்ளு சட்டை மாறன் சார் பயமா?

இந்நிலையில், சர்தார் திரைப்படம் ரூ 100 கோடியை வசூலித்தற்கு அனைவரும் பாராட்டி வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்தார் 100 கோடி வசூலிக்கவில்லை எல்லாம் சும்மா பித்தலாட்டம் என்று பதிவிட்டுவிட்டு அதை சிறிது நேரத்தில் அழித்து விட்டார். பல படங்களை தாறுமாறாக விமர்சனம் செய்யும் அறிவு ஜீவி ப்ளூ சட்டை மாறன், 100 கோடி இல்லை என்று போட்டுவிட்டு அழிக்க என்ன காரணம் பயமா சார் என்று, நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X