சரிகம கிட்ஸின் 'ஸ்வீட் வேல்யூஸ்'

By Chakra

Saregama Kids ChocoLait
இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு நிறுவனமான சரிகம, சிறார்களுக்கான ஆடியோ விஷூவல் தொகுப்பான ஸ்வீட் வேல்யூஸ் என்ற டிவிடி தொகுப்பை வெளியடுகிறது.

சாக்லேட் புரடக்ஷன்ஸ் நிறுவனத்தின் புகழ் பெற்ற பிராண்ட்தான் இந்த சாக்லேட் கிட்ஸ். அதன் முதல் ஆடியோ விஷூவல் தொகுப்புதான் இந்த ஸ்வீட் வேல்யூஸ்.

சாக்லேட் புரடக்ஷன்ஸ் நிறுவனத்தின் ஷோபா, சோனு குமார் ஆகியோரின் மூளையில் உதித்தது இந்த ஸ்வீட் வேல்யூஸ். சிறார்களுக்கான பல்வேறு தயாரிப்புகளை சாக்லேட் வெளியிட்டு வருகிறது. சிறந்த குழந்தைகளை உருவாக்குவதற்கான முயற்சிதான் இது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள ஸ்வீட் வேல்யூஸ் டிவிடியில், சிறார்களுக்கான நடனம், இசை, எளிமையான பாடல்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இந்த நிகழ்ச்சியை 9 வயதான பாரதி தொகுத்து அளித்துள்ளார்.

இதன் வெளியீட்டு விழா நாளை காலை 10 மணிக்கு சென்னை, மயிலாப்பூர், சிவகாமி பெத்தாச்சி ஆடிட்டோரியத்தில் நடைபெறுகிறது.

திரைப்பட இயக்குநர் கே.எஸ்.சேது மாதவன் குத்து விளக்கேற்றுகிறார்.

சாக்லேட் கிட்ஸ் பிராண்ட்டை அறிமுகப்படுத்தி வெளியிடுகிறார் தாரே ஜமீன் பர் படப் புகழ் தர்ஷீல் சபாரி.

ஸ்வீட் வேல்யூஸ் டிவிடி தொகுப்பை வெளியிடுகிறார் எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் எம்.பி. நிர்மல்.

ஸ்வீட் வேல்யூஸ் டிவிடியில், சிறார்களுக்கான நடனம், இசை, எளிமையான பாடல்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இந்த நிகழ்ச்சியை 9 வயதான பாரதி தொகுத்து அளித்துள்ளார்.

வழக்கமான கார்ட்டூன் களேபரமோ, கற்பனை கதாபாத்திரமோ இல்லாமல், 'லைவ்'லியான டிவிடியாக இது உள்ளது இதன் சிறப்பம்சமாகும்.

இதில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு பாடலிலும் நல்ல சிந்தனைகளும், அழகான அறிவுரைகளும் பொழுது போக்கு அம்சத்துடன் அமைந்துள்ளது. இதைப் பார்க்கும், கேட்கும் ஒவ்வொரு குழந்தையையும் அது நல்ல பாதையில் திருப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.

மொத்த தொகுப்புமே அருமையான இசைக்கோர்வையாக உள்ளதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும்.

2 முதல் 9 வயது வரையிலான குழந்தைகளுக்கு சர்வதேச தரத்துடன் கூடிய ஆடியோ விஷூவல் தொகுப்பு இது என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த டிவிடி குறித்து சரிகம நிறுவனத்தின் ஆடியோ விஷூவல் மீடியா பிரிவின் பொது மேலாளரான பி.ஆர். விஜயலட்சுமி கூறுகையில், வேடிக்கையான முறையில், ஜாலியான முறையில் இந்த ஸ்வீட் வேல்யூஸ் தொகுப்பை உருவாக்கியிருக்கிறோம். வெறுமனே போதனையாக மட்டும் இல்லாத வகையில் இதை வடிவமைத்துள்ளது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

ஏற்கனவே எங்களது தயாரிப்பில் வெளியான காத்ரீனா கைப், ஏ.ஆர்.ரஹ்மானுடன் ரைம்ஸ்கூல் என்ற தொகுப்பு பெரும் வெற்றி பெற்றது. அதன் முதல் தொகுப்பு கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. அனைத்து இசைத் தொகுப்புகளிலும் இது முன்னணி இடத்தைப் பிடித்தது. அந்த வரிசையில், ஸ்வீட் வேல்யூஸும் சேரும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.

முன்பு செயல்பட்டு வந்த கிராமபோன் கம்பெனி ஆப் இந்தியா நிறுவனம்தான் தற்போது சரிகம இந்தியா நிறுவனமாக செயல்படுகிறது. இந்தியாவின் முன்னணி இசை நிறுவனம் இது. தற்போது சிறார்களுக்கான இசைப் பிரிவிலும் இது நுழைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு

சீமா முகர்ஜி ([email protected] அல்லது 9930274902)
இணையதளம் - http://kids.saregama.com

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X