இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இளையராஜாவுக்கே இடைக்காலத் தடை.. நீதிமன்றம் உத்தரவு.. பஞ்சாயத்து என்ன?

டெல்லி: கடந்த 1976ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை இசைஞானி இளையராஜா இசையமைத்த படங்களில் குறிப்பிட்ட அளவிலான படங்களான 134 படங்களில் உள்ள பாடல்களை இளையராஜா பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது டெல்லி உயர்நீதிமன்றம். சரிகம நிறுவனம் தொடுத்த வழக்கில் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இசைஞானி இளையராஜா தனது இசையில் உருவான பாடல்கள் மற்றும் பின்னணி இசை போன்றவற்றின் உரிமத்தை சில ஆடியோ நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விற்பனை செய்துள்ளார். ஒப்பந்தத்தின் குறிப்பிடப்பட்ட கால கட்டம் முடிந்ததும், ஒப்பந்த நிறுவனம் பாடல்களை பயன்படுத்த முடியாது. இப்படி இருக்கையில் இளையராஜாவின் இசையில் உருவான தேர்வு செய்யப்பட்ட 134 படங்களின் பாடல்களின் உரிமத்தை இளையராஜா மற்ற இசை ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு விற்பனை செய்ததை அடுத்து தொடரப்பட்ட வழக்கில் இந்த இடைக்கால உத்தரவை அவருக்கு விதித்துள்ளது. இந்த தகவல் இளையராஜா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. சில இணையவாசிகள் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த இளையராஜாவுக்கே தடையா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Saregama vs Ilaiyaraaja Delhi HC imposes interim stay on Ilaiyaraaja using songs from 134 films

ராக தேவன்: இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் மொத்த இந்திய சினிமாவிலுமே இசையின் உச்சத்தில் இருக்கும் ஒருவர். டிஜிட்டல் இசை மூலம் இசையை பல இசையமைப்பாளர்களும் உருவாக்கிக் கொண்டு இருக்கும்போது, இசையை எழுதி, அதை இசைக் கலைஞர்கலைஞர்களை வாசிக்க வைத்து, அந்த இசையைக் கோர்த்து, அதனை பாடல்களுக்கும் படங்களுக்கும் பின்னணி இசையாக சேர்த்து வருகிறார். 80 வயதைக் கடந்த பின்னரும் தொடர்ந்து இசையமைத்துக் கொண்டும், சிம்பொனி எழுதிக் கொண்டும் ஒரு இளைஞனைப் போல இசையுலகில் சரித்திரம் படக்கும் ஆர்வத்தை கைவிடாமல் இருக்கிறார்.

ஷாக்: டெல்லி நீதிமன்றம் பிறப்பித்துள உத்தரவில் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திய தகவல் என்றால், தனது அனுமதி இல்லாமல் இசைஞானி இளையராஜாவின் பாடல்களை வேறு யாராவது வணிக நோக்கில் பயன்படுத்தினால், அதுவும் குறிப்பாக திரைப்படங்களில் பயன்படுத்தினால் அதை எதிர்த்து வழக்கு தொடுப்பார். இதை கடந்த காலங்களில் பலமுறை பார்த்திருக்கிறோம். அண்மையில் கூட டியூட் படத்தில் தனது பாடலை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்காக வழக்கு தொடுத்து, தனக்குச் சாதகமாக தீர்ப்பும் பெற்றார். இப்படி இருக்கையில் இளையராஜாவின் பாடலை அவரையே பயன்படுத்த வேண்டாம் என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X