Exclusive: திவினேஷ் குரலில் மயங்கிய தேவா..சரிகமப மேடையில் கலக்கும் பையன்.. அம்மா நெகிழ்ச்சி பேட்டி!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4. வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மக்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக இருந்து வருகிறான் சுட்டி பையன் திவினேஷ்.
அவனை பற்றியும் அவனது குடும்பத்தை பற்றியும் சரிகமப அவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்களை பற்றியும் திவினேஷின் அம்மா அனிதாவை தொடர்பு கொண்டு பேசினோம். அவருடனான உரையாடல்களை பார்க்கலாம் வாங்க.

கேள்வி: உங்கள் குடும்பத்தை பத்தி சொல்லுங்க?
என் பெயர் அனிதா.. திவினேஷின் அம்மா.. நான் டைலரிங் வேலை மற்றும் கேட்டரிங் வேலை செய்துவருகிறேன். திவினேஷின் அப்பா பிரதாப். பால் வண்டி ஓட்டுறாரு.
கேள்வி: உங்க மகன் திவினேஷுக்கு நல்லா பாட வரும்னு எப்போ கண்டுபிடிசீங்க?
சின்ன வயசில் இருந்தே ஏதாவது பாடுவான்.. ஆனால், யார் முன்னடியாவது பாடுடானு சொன்னா வெட்கப்பட்டுக்கிட்டு பாட மாட்டான், அவனுக்கு இருக்கும் கூச்சத்தை போக்கணும்னு நான் கல்யாணத்தில் கேட்டரிங் வேலை செய்ய போன இடத்தில், கச்சேரியில் அவனுக்கு பாட ஒரு வாய்ப்பு கேட்டு பாடவைக்கலாம் என்று நினைத்தேன், ஆனால், நிறைய ஏமாந்து போய் இருக்கேன். ஏதேதோ காரணத்தை சொல்லி தட்டி கழிச்சிடுவாங்க.
கேள்வி: உங்க குழந்தைக்கு இந்த சிங்கிங் லைன் சரியா இருக்கும்னு எப்போ முடிவு பண்ணீங்க?
அவனை இப்படி ஒரு நிகழ்ச்சியில் பாட வைக்கணும்னு எல்லாம் நாங்க பெருசா கனவு கண்டது இல்ல.. அதுக்கான நேரமும் எங்களுக்கு இல்ல. தினமும் பொழைப்பை தள்ளினாலே போதும் என்ற அளவில் தான் எங்க வாழ்க்கை போயிட்டு இருந்தது. ஆடிஷன் நடக்குதுன்னு தெரிஞ்சி சும்மா ட்ரை பண்ணி பார்க்கலாம்னு தான் இங்க வந்தோம்.
கேள்வி: சரிகமப ஆடிஷனில் உங்க பையன் செலக்ட் ஆனதும் எப்படி பீல் பண்ணீங்க?
அவன் செலக்ட் ஆவானு நம்பிக்கை எல்லாம் பெருசா இல்ல. ஆனால் அவன் செலக்ட் ஆனதும் எங்களுக்கே அதிர்ச்சியாவும் சந்தோசமாகவும் இருந்தது. அதே நேரத்தில் அடுத்தடுத்த ரவுண்டுக்கு எப்படி போக போறான்? மேடையில் எப்படி பாடுவானு என்ற பயமும் அதிகமாச்சு. அவன் பாடுற வரைக்கும் பாடட்டும்னு இருந்தோம். ஆனால் இந்த அளவுக்கு ரீச் ஆவானு நினைத்து பார்க்கல.
கேள்வி. திவினேஷை இப்போ எல்லாரும் டிவைனேஷ்-னு தான் கூப்பிடுறாங்க.. அந்த அளவுக்கு அவனுடைய குரல் தெய்வீக குரலாக இருக்கிறதா உலகம் முழுவதும் உள்ள மக்கள் பாராட்டுறாங்க, இதையெல்லாம் பார்க்கும் போது எப்படி பீல் பண்றீங்க?
ரொம்ப சந்தோசமாக இருக்கு, அவனுடைய குரல் இந்த அளவுக்கு மக்களுக்கு பிடிக்கும்னு எதிர்பார்க்கல.
கேள்வி: மேடையில் எந்த பாட்டு பாடினாலும் எவ்வளவு பாராட்டு கிடைத்தாலும் எந்த சலனமும் இல்லாமல் சைலெண்டாகவே இருக்கானே.. வீட்லயும் அப்படி தானா?
ஆமாம் வீட்டிலேயும் அப்படி தான், பக்கத்து வீட்டு பசங்க கூட சேர்ந்து விளையாட மாட்டான். அவ்வளவு சீக்கிரம் எனக்கு இது வேணும்னு வாயை திறந்து கேட்க கூட மாட்டான். அப்படியே கேட்டாலும் காசு இருக்கும் போது வாங்கி தா மா என்று தான் சொல்லுவான்

கேள்வி: சரிகமபவிற்கு முன், சரிகமபாவிற்கு பின்.. உங்க வாழ்க்கை எப்படி இருக்கு?
சரிகமபவுக்கு முன்னாடி எங்களை பத்தி யாருக்குமே எதுவும் தெரியாது, சொந்தகாரங்க கூட பெருசா பேச மாட்டாங்க. ஆனால் இந்த நிகழ்ச்சி சமுதாயத்தில் எங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து இருக்கு. எங்க வீட்ல ஏதாவது பங்க்ஷன் நடந்தா உங்க பையன் கச்சேரினு தான் சொல்றாங்க. ரொம்ப சந்தோசமா இருக்கு. வாழ்க்கையில் கஷ்டங்கள் இருந்தாலும் கிடைக்குற மதிப்பும் மரியாதையும் ஆறுதலா இருக்கு.
கேள்வி: திவினேஷ்க்கு மக்கள் தொடர்ந்து பெரிய அளவில் ஆதரவு கொடுக்கிறாங்க? அந்த மக்களுக்கு நீங்க என்ன சொல்ல ஆசைப்படுறீங்க.
ஒண்ணே ஒன்னு தான் சொல்லணும்.. ரொம்ப நன்றினு தான் சொல்லுவேன். யாருனே தெரியாத ஒரு பையனுக்கு இவ்வளவு சப்போர்ட் கொடுக்கறாங்க. அவனுக்கு சப்போர்ட் பண்றவங்களை நேரில் பார்த்தா காலில் விழுந்துடுவேன். அந்த அளவிற்கு நன்றிக்கடன் பட்டு இருக்கோம்.
கேள்வி: இந்த நிகழ்ச்சியில் மறக்க முடியாத தருணம் என்ன?
ஒவ்வொரு வாரமும் மறக்க முடியாத தருணம். எங்க பிள்ளையா இந்த அளவிற்கு பாடுறானு ரொம்ப சந்தோஷப்படுவேன். எம்.எஸ் விஸ்வநாதன் குடும்பம் வாழ்த்தியது எல்லாம் மறக்க முடியாதது அது எங்களுக்கு கிடைத்த வரம்.
கேள்வி: திவினேஷ் எங்க குடும்பத்துக்கு வாரிசு என்பது போல MS விஸ்வநாதன் குடும்பத்தார்கள் சொன்னார்கள். அந்த ஒரு தருணம் எப்படி இருந்தது?
அதெல்லாம் சொல்றதுக்கு வார்த்தையே இல்ல.. யாருக்கு கிடைக்கும் இப்படி ஒரு வாய்ப்பு? திவினேஷ் அவங்க வீட்டு வாரிசு போல உருவாக்கி கொடுத்த போட்டோவை எங்க வீட்டு ஹால்ல மாட்டி வச்சி தினமும் அழகு பார்க்கிறோம்.
அவங்க கொடுத்த ஸ்படிக மாலை, சால்வை எல்லாத்தையும் பூஜை அறையில் வைத்து வாரம் வாரம் பூஜை பண்ணிட்டு தான் ஷூட்டிங் கிளம்புவோம். அந்த மாலையை போட்டுட்டு திவினேஷ் ஷூட்டிங் வந்து பாடுவான்.
கேள்வி: திவினேஷ் என்னவாகனும்னு உங்களுக்கு ஆசை?
அவன் ஆசைப்படி அவன் வாழ்க்கை அமைந்தால் அதுவே போதும். அவன் என்னவாக ஆசைப்படுறானோ அதுவாகவே ஆகட்டும். அது தான் எங்களுடைய ஆசையும் கூட.
கேள்வி: சரிகமப டீம் சப்போர்ட்டா இருக்காங்களா? அதை பத்தி சொல்லுங்க
ரொம்ப சப்போர்ட்டா இருக்காங்க, அவன் நல்லபடியா பாட நல்லா மெனக்கெட்டு பாட்டு சொல்லி தராங்க. அவன் வேற எங்கயும் பாட்டு கிளாஸ் கூட போறது இல்ல.
கேள்வி:. பாட்டுல அசத்துற திவினேஷ் படிப்பில் எப்படி?
படிப்பு கொஞ்சம் சுமார் தான்.. வசதி இல்லாததால் கவர்மெண்ட் ஸ்கூல்ல தான் படிக்க வைக்கிறோம். போக போக நல்லா படிப்பானு நம்புறோம், பார்க்கலாம். இவ்வாறாக திவினேஷின் அம்மா அனிதா சரிகமப குறித்தும் திவினேஷ் குறித்தும் பேசி முடித்தார்.


Click it and Unblock the Notifications











