அந்தக் காட்சியில் நடிக்கவில்லை என நஸ்ரியா நிரூபிக்கத் தயாரா?- சற்குணம் ஆவேசம்
சென்னை: ஒரு பாடல் காட்சியில் வேறு நடிகையின் தொப்புளைக் காட்டி மோசடி செய்துவிட்டதாக குற்றம் சாட்டி வரும் நஸ்ரியா, அந்தக் காட்சியில் தான் நடிக்கவே இல்லை என நிரூபிக்கத் தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தான் எந்த வகையிலும் ஆபாசமாக அவரை படமெடுக்கவில்லை என்றும், படத்துக்கு எந்தக் கட்டும் இல்லாத யு சான்று தந்திருக்கிறது சென்சார் குழு என்றும் சற்குணம் தெரிவித்துள்ளார்.
இனிக்க இனிக்க என்ற பாடல் காட்சியில் தனக்கு பதில் வேறு நடிகையின் தொப்புளை க்ளோசப்பில் காட்டி, அதை தனது தலையோடு இணைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டி, சற்குணம் மீதும், தயாரிப்பாளர் மீதும் நடிகை நஸ்ரியா புகார் வாசித்து வருகிறார்.

சற்குணம் அறிக்கை
கமிஷனர் அலுவலகம், நீதிமன்றம் என அவர் போகத் தொடங்கிவிட்ட நிலையில், தன் பக்க விளக்கத்தை மீடியாவுக்கு அனுப்பியுள்ளார் இயக்குநர் சற்குணம்.

நிரூபிக்கத் தயாரா?
அதில், "பாடல் காட்சியில் தான் நடிக்கவே இல்லை என்று கூறி வரும் நஸ்ரியா, மீடியா நண்பர்களோடு அமர்ந்து அந்த பாடல் காட்சியைப் பார்த்து, 'நடித்தது நானில்லை அது டூப்தான்' என நிரூபிக்கத் தயாரா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இனிக்க இனிக்க
மேலும், "நய்யாண்டி பட நாயகி நஸ்ரியா பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு அளித்து வரும் பேட்டியில், இனிக்க இனிக்க பாடல் முழுக்க வேறு ஒரு நடிகையைப் பயன்படுத்தி எடுத்ததாகவும், ட்ரைலரில் ஒரு க்ளோஸ் அப் ஷாட்டில் டூப் நடிகையைப் பயன்படுத்தியிருப்பதாகவும் கூறிவருவதை நீங்கள் அறிவீர்கள்.
நான் ஏற்கெனவே களவாணி, வாகை சூடவா போன்ற தரமான படங்களை இயக்கி தேசிய விருதையும் பெற்றுள்ளேன்.

டூப்பே இல்லை
இனிக்க இனிக்க என்ற பாடலில் முழுக்க முழுக்க நஸ்ரியாவைத்தான் நடிக்க வைத்தேன். வேறு டூப் நடிகை யாரையும் பயன்படுத்தவே இல்லை.

ஒரு க்ளோஸ் அப் ஷாட்
படத்தை எடிட் செய்யும்போது ஒரு காட்சியில் அந்த காட்சியின் கன்டென்ட் மக்களுக்குப் போய்ச் சேர ஒரு க்ளோஸ் அப் ஷாட் தேவைப்பட்டது. எனவே அதில் வந்து நடித்துத் தரச் சொன்னேன்.

பப்ளிசிட்டிக்காக
இதற்காக கேரளாவிலிருந்து என்னால் வர முடியாது. வேறு யாரையாவது வைத்து எடுத்துக்கங்க என்று சொன்ன நஸ்ரியாவுக்கு இப்போது என்ன பிரச்சினை வந்துவிட்டது. ஒருவேளை தன்னுடைய மார்க்கெட்டிங் பப்ளிசிட்டிக்காக செய்கிறார் போலிருக்கிறது.

நீக்க தயார்
ஒரு வேளை ட்ரைலரில் வரும் க்ளோஸ் அப் ஷாட் உறுத்தலாக இருந்தால் அதை நீக்கவும் தயார். ஆனால் முழுப் பாடலையும் மீடியா நண்பர்களுடன் அமர்ந்து பார்த்துவிட்டு, அதில் நடித்திருப்பது நானில்லை என நஸ்ரியாவால் மறுக்க முடியுமா?

யு சான்று
இந்தப் படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது என்பதை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். இது குடும்பத்துடன் பார்க்க வேண்டிய பேமிலி என்டர்டெயின்மென்ட்,' என்று குறிப்பிட்டுள்ளார் சற்குணம்


Click it and Unblock the Notifications











