படம் பர்ஸ்ட்... பாய் பிரண்ட் நெக்ஸ்ட்: மகள் அக்‌ஷராவுக்கு ‘அன்புக் கட்டளை’யிட்ட சரிகா

மும்பை: கமல் - சரிகா தம்பதியினரின் இளைய மகளான அக்‌ஷரா தனுஷ் ஜோடியாக பால்கி படத்தில் அறிமுகமாகிறார்.

இந்நிலையில் சமீபகாலமாக ஏக் துஜே கேலியே படத்தில் கமலுடன் ஜோடியாக நடித்த மாஜி நாயகி ரதி அக்னிகோத்ரி மகன் தனுஜ் விர்வாணியுடன் அக்‌ஷரா நட்பாக இருப்பதாகச் சொல்லப் படுகிறது.

இதனால் மகளின் திரைவாழ்க்கை பாதிக்கப் படலாம் என அஞ்சும் சரிகா, முதலில் பட வேலைகளைக் கவனி என மகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிமுகம்...

அறிமுகம்...

பிரபல பாலிவுட் இயக்குநர் பால்கியின் இயக்கத்தில் அமிதாப் மற்றும் தனுஷ் நடிக்கும் படத்தின் மூலம் திரையுலக வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கிறார். இதனால் தாய் என்ற முறையில் மிகவும் சந்தோஷமாக இருந்தார் சரிகா.

பிரண்ட் ஷிப்...

பிரண்ட் ஷிப்...

தன், மூத்த மகள், ஸ்ருதியை போலவே, அக்ஷராவும் பெரும் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில் இருந்தார் சரிகா. ஆனால், அக்‌ஷராவோ தன் பாய் பிரண்டுடன் தனது பொன்னான பொழுதைக் கழிக்கிறாராம்.

காற்றில் பறக்கும் அட்வைஸ்...

காற்றில் பறக்கும் அட்வைஸ்...

சரிகா தரும் அறிவுரைகளை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் பறக்க விட்டு விடுகிறாராம். வாராவாரம் சனிக்கிழமையானால் தனுஜின் வீட்டில் இருவரும் சந்தித்துக் கொள்கிறார்களாம்.

அம்மா சாக்கு...

அம்மா சாக்கு...

தனுஜ்-ன் புரானி ஜீன்ஸ் படத்தில் சரிகாவும் நடித்து வருகிறார். எனவே சரிகாவைப் பார்ப்பது போல் சென்று மனாலியில் தனுஜூடன் சுற்றித் திரிந்துள்ளார் அக்‌ஷரா.

பொன்னான வாய்ப்பு...

பொன்னான வாய்ப்பு...

இதனால் மகளுக்கு நடிப்பில் கவனம் செலுத்துமாறு தொடர்ந்து அறிவுரை தெரிவித்து வருகிறாராம் சரிகா. பால்கி-அமிதாப்-தனுஷ் போன்ற நல்ல கூட்டணியில் முதல் படம் அமைவது மிகவும் அதிர்ஷ்டம். எனவே வாய்ப்பை நழுவ விட்டு விடாதே எனச் சொல்கிறாராம் சரிகா.

இது வேற... அது வேற

இது வேற... அது வேற

இது ஒருபுறம் இருக்க தனது தனிப்பட்ட விஷயத்தைப் படப்பிடிப்பில் தனுஷுடன் நேரில் காட்டுவதில்லையாம் சரிகா. செட்டிற்கு வந்து விட்டால் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தும் மிகச் சிறந்த நடிகை சரிகா என அப்பட இயக்குநர் தனுஸ்ரீ புகழ்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X