விக்ரமின் கோப்ரா படத்தில் இருந்தும் சர்ச்சை ஹீரோ நீக்கம்... வந்தார் மலையாள இளம் நடிகர்

By

சென்னை: விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் இருந்தும் அந்த சர்ச்சை ஹீரோ அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

மலையாள இஷ்க், கும்பளங்கி நைட்ஸ் உட்பட சில படங்களில் நடித்துள்ள இளம் ஹீரோ ஷேன் நிகம். இவர், வெயில், குர்பானி ஆகிய மலையாள படங்களில் நடித்து வந்தார்.

வெயில் படத்துக்கு தலைமுடியை அதிகமாக வளர்க்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை மீறி, ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது, திடீரென தலைமுடியை மாற்றி, அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

தயாரிப்பாளர் அதிர்ச்சி

தயாரிப்பாளர் அதிர்ச்சி

இதனால் வெயில் தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ் அதிர்ச்சி அடைந்தனர். தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார் ஜார்ஜ். பிறகு இந்தப் பிரச்னை சங்கத்தில் பேசி தீர்க்கப்பட்டது. இனி கெட்டப்பை மாற்ற மாட்டேன் என்று உறுதி அளித்திருந்தார் நிகம். இந்நிலையில், திடீரென மீண்டும் கெட்டப்பை மாற்றி புதிய கெட்டப்பை வெளியிட்டார் நிகம்.

தடை விதித்தனர்

தடை விதித்தனர்

இதனால் தயாரிப்பாளர்கள் அவருக்கு தடை விதித்தனர். அவர் நடித்த வெயில், குர்பானி படங்கள் கைவிடப் படுவதாகவும் அந்தப் படங்களுக்காகச் செலவழிக்கப்பட்ட ரூ.7 கோடியை ஷேன் நிகம் தர வேண்டும் என்றும் கூறி இருந்தனர். இதற்கிடையே தயாரிப்பாளர்களை மன நோயாளிகள் என்பது போல ஷேன் நிகம் தரக்குறைவாகப் பேசியதாக புகார் எழுந்தது.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இந்தப் பிரச்னை குறித்து மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வின் செயற்குழு பேச்சுவார்த்தை நடத்தியது. தன்னால் தடைபட்டுள்ள படங்களை முடித்துக்கொடுக்கத் தயாராக இருப்பதாக ஷேன் உறுதியளித்தார். இதை ஏற்றுக்கொண்ட நடிகர் சங்கம், ஷேனுக்கான தடையை நீக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பியது.

நஷ்டஈடு

நஷ்டஈடு

இந்நிலையில் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. ஷேன் நிகம் பிரச்னை காரணமாக தயாரிப்பாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர் என்றும் நஷ்டஈடாக அவர் ரூ.1 கோடி கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இலங்கை தமிழர்

இலங்கை தமிழர்

இந்நிலையில் ஷேன், தமிழில் சீனு ராமசாமி இயக்கும் ஸ்பா படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இலங்கை தமிழராக நடிப்பார் என்று கூறப்பட்டது. இதன் ஷூட்டிங் டிசம்பர் மாதம் தொடங்கியிருக்க வேண்டும். இதில் நடிக்க ஷேன் அக்கறை காட்டவில்லை என்பதால் நீக்கப்பட்டார்.

சர்ஜானோ காலித்

சர்ஜானோ காலித்

இப்போது விக்ரமின் கோப்ரா படத்தில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜய் ஞானமுத்து இயக்கும் இந்தப் படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி இருந்தார். இப்போது அவரை நீக்கிவிட்டு, சர்ஜானோ காலித் என்ற இளம் நடிகரை ஒப்பந்தம் செய்துள்ளனர். காலித், மோகன்லாலின் பிக்பிரதர் படத்தில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X