“இதோ எங்களுக்கும் காரணம் கிடைச்சுடுச்சுல்ல”.. கொண்டாட்டத்தை ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்!

சர்கார் படத்தின் 25வது நாளை விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் டிரெண்டிங்காக்கி வருகின்றனர்.

Recommended Video

சர்கார் படம் ரிலீசாகி 25 நாட்கள் ஆகிவிட்டது | சோகத்தில் ராஷ்மிகா- வீடியோ

சென்னை: சர்கார் படம் ரிலீசாகி 25 நாட்கள் ஆனதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் கடந்த 6ம் தேதி தீபாவளியை ஒட்டி ரிலீசானது. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி ரிலீசானபோதும், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது இப்படம்.

Sarkar 25th day trending in twitter

இந்நிலையில், இப்படம் ரிலீசாகி 25 நாட்கள் ஆனதை டிவிட்டரில் ஹேஷ்டேக் போட்டு விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஏற்கனவே, ரஜினியின் 2.0 ரிலீஸ், அஜித்தின் விஸ்வாசம் மோஷன் போஸ்டர் ரிலீஸ் போன்றவை டிவிட்டரில் டிரெண்டிங்கில் இருந்தது. இந்த சூழ்நிலையில், #sarkar25thday என்ற ஹேஷ்டேக்குடன் விஜய் ரசிகர்களும் களத்தில் குதித்துள்ளனர். தற்போது இந்த ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகியிருக்கிறது.

விஜய் பட புதிய பட அப்டேட் ஏதாவது வரும் என காத்திருந்து ஏமாந்த ரசிகர்கள், கிடைத்த இந்த ஹேஷ்டேக்கை டிரெண்டிங்காக்கி வருகின்றனர்.

சர்கார் படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார் விஜய். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. நயன்தாரா, விஜய்க்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்கிறார். அடுத்தாண்டு இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தினை தளபதி 63 எனக் கூறிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X