சர்கார் இசை வெளியீடு: விஜய் ரசிகர்களுக்கு முதல் மரியாதை
சென்னை: சர்கார் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு மட்டும் மூவாயிரம் சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் சர்கார். இப்படத்திலிருந்து "சிம்டாங்காரன்" மற்றும் "ஒரு விரல் புரட்சி" ஆகிய பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ளன.

இந்த நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி சர்கார் திரைப்பட பாடல் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறுகிறது. மீதமுள்ள மூன்று பாடல்களையும் சேர்த்து மொத்தமுள்ள ஐந்து பாடல்களும் மேடையில் பெர்ஃபாம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
சென்னை தாம்பரத்திலுள்ள ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் இன்று மாலை பாடல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க வரும் ரசிகர்களுக்காக மூவாயிரம் சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதுமுள்ள விஜய் ரசிகர்களுக்கு பல போட்டிகளை வைத்து தேர்ந்தெடுத்து இலவச நுழைவுச் சீட்டு வழங்கியுள்ளனர்.
சன் தொலைக்காட்சி இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்வதால் மற்ற போட்டிச் சேனல்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications