twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இலவச விளம்பரத்தின் எதிரொலி: 6 நாட்களில் ரூ. 200 கோடி வசூல் செய்த 'சர்கார்'

    By Siva
    |

    Recommended Video

    6 நாட்களில் ரூ. 200 கோடி வசூல் செய்த விஜய் சர்கார்- வீடியோ

    சென்னை: விஜய்யின் சர்கார் படம் ரிலீஸான 6 நாட்களில் உலக அளவில் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது.

    ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் நடித்த சர்கார் படம் ரிலீஸான இரண்டே நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்தது.

    இந்தியா தவிர வெளிநாடுகளிலும் நல்ல வசூல் செய்து வருகிறது.

    விளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?விளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

    ரூ. 200 கோடி

    ரூ. 200 கோடி

    சர்கார் படம் ரிலீஸான 6 நாட்களில் உலக அளவில் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது. வார இறுதி நாட்களில் சென்னையில் மட்டும் ரூ. 10.7 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் சர்கார் வசூலில் மேலும் பல புதிய சாதனை படைக்கும் என்று நம்பப்படுகிறது.

    வசூல்

    வசூல்

    அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படமும் ரூ. 200 கோடி வசூல் செய்தது. ஆனால் சர்கார் மெர்சலின் வசூலை எல்லாம் ஓரங்கட்டிவிடும் என்று தெரிகிறது. விஜய்யின் இரண்டு படங்கள் தொடர்ந்து ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் கோலிவுட்டின் வசூல் மன்னன் ஆகியுள்ளார் விஜய்.

    அதிமுக

    அதிமுக

    மெர்சல் படத்திற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த எதிர்ப்பே படத்திற்கு விளம்பரமாக மாறி வசூலை அள்ளிக் குவித்தது. இந்நிலையில் சர்கார் படத்திற்கு அதிமுக அரசு எதிர்ப்பு தெரிவித்ததுடன் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வைத்தது. அதுவும் கூட படத்திற்கு இலவச விளம்பரமாக அமைந்துவிட்டது.

    கேக்

    கேக்

    படத்தில் இலவச மிக்சி, கிரைண்டரை எரிக்கும் காட்சியை அதிமுக அரசு நீக்க வைத்தது. இந்நிலையில் அதை கிண்டல் செய்யும் வகையில் சர்கார் வெற்றிக் கொண்டாட்ட கேக்கில் மிக்சி, கிரைண்டர் வைத்தனர். அந்த கேக்கை விஜய்யை வைத்து வெட்டவிட்டு சர்கார் வெற்றியை கொண்டாடியுள்ளனர்.

    English summary
    Vijay starrer Sarkar has collected Rs. 200 crore in just six days of its release.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X