சர்காருக்கு வழிவிட்ட என்.ஜி.கே.?: அன்றே சூர்யா ரசிகர்கள் சந்தேகப்பட்டது சரியாப் போச்சு
சென்னை: தீபாவளிக்கு சர்கார் சோலோவாக ரிலீஸாகப் போவதாக கூறப்படுகிறது.
இந்த தீபாவளிக்கு விஜய்யின் சர்கார், அஜித்தின் விஸ்வாசம், சூர்யாவின் என்.ஜி.கே. ஆகிய படங்கள் ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. இதில் விஸ்வாசம் தீபாவளி ரேஸில் இருந்து விலகிவிட்டது.
விஸ்வாசம் படம் பொங்கலுக்கு தான் ரிலீஸாக உள்ளது.

விஜய்
விஜய்யின் சர்கார் படப்பிடிப்பு அடுத்த மாதம் முடிந்துவிடும். அமெரிக்காவில் சில காட்சிகளை படமாக்கிவிட்டால் வேலை முடிந்துவிடுமாம். படம் நிச்சயம் தீபாவளிக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீபாவளி தளபதி தீபாவளி என்பதில் சந்தேகமே இல்லை.

சூர்யா
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என்.ஜி.கே. படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் தான் முடிந்துள்ளது. செகண்ட் லுக் போஸ்டர் வெளியிட்டபோது அதில் தீபாவளி ரிலீஸ் என்று குறிப்பிடவில்லை. தீபாவளி ரிலீஸ் என்ற அறிவிப்பு ஏன் இல்லை என்று சூர்யா ரசிகர்கள் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவிடம் கேட்டனர்.

தள்ளிப் போகிறது
என்.ஜி.கே. படம் தீபாவளிக்கு ரிலீஸாகாது என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்தில் படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தீபாவளி ரேஸில் இருந்து என்.ஜி.கே. விலகியுள்ளது சூர்யா ரசிகர்களை வருத்தம் அடைய வைத்துள்ளது.

வசூல்
தீபாவளிக்கு சோலோவாக வரும் சர்கார் நல்ல வசூல் பார்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கத்தி, துப்பாக்கி ஆகிய படங்களை அடுத்து ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் சர்கார். விஜய் தம்மடிப்பது போன்ற போஸ்டரால் படம் பிரச்சனையில் சிக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











