ரஜினி, விஜய் படங்களில் பணியாற்றிய பிரபலம் மாரடைப்பால் உயிரிழப்பு… திரையுலகினர் அதிர்ச்சி!

சென்னை: ஆயிரத்தில் ஒருவன், தெய்வதிருமகள், சர்கார், தர்பார் உள்ளிட்ட படங்களில் கலை இயக்குநராக பணியாற்றியவர் சந்தானம்.

இயக்குநர்கள் ஏஆர் முருகதாஸ், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரின் ஆஸ்தான கலை இயக்குநர் சந்தானம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மாரடைப்பு காரணமாக கலை இயக்குநர் சந்தானம் உயிரிழந்தது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலை இயக்குநர் சந்தானம்

கலை இயக்குநர் சந்தானம்

தமிழ்த் திரையுலகில் மிக முக்கியமான கலை இயக்குநராக வலம் வந்தவர் சந்தானம். ஆயிரத்தில் ஒருவன், தெய்வத் திருமகள், சர்கார், தர்பார், ஜகமே தந்திரம், இறுதிச் சுற்று, மஹான் ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார். முன்னணி கலை இயக்குநரான சந்தானம், நேற்று மாலை திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். சந்தானம் மரணமடைந்த செய்தி திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும், பலரும் சந்தானம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஆயிரத்தில் ஒருவன்

ஆயிரத்தில் ஒருவன்

இன்று மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கெல்லாம் விதை தூவியது செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படமே. அதில், செல்வராகவனின் மேக்கிங்கில் பெருமளவு சப்போர்ட்டாக அமைந்து ஆர்ட் செட்டிங் தான். ரசிகர்கள் வியக்கும் அளவிற்கு அவ்வளவே நேர்த்தியான கலை அமைப்பை வடிவமைத்தது சந்தானம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பக் காட்சியில் இருந்து க்ளைமேக்ஸ் வரை ஆர்ட் டைரக்‌ஷனில் மிரட்டியிருப்பார் சந்தானம்.

சர்கார், தர்பார்

சர்கார், தர்பார்

அதேபோல், சர்கார் திரைப்படத்திலும் பல இடங்களில் தனது செட்டிங்கால் ரசிகர்களை பிரமிக்க வைத்திருந்தார். சிம்டாங்காரன் பாடல், அரசியல் மாநாடு என சர்கார் படத்தில் பிரம்மாண்டமான செட்டிங் போட்டு படத்துக்கு பெரிய பலமாக இருந்தது சந்தானம் தான். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'தர்பார்' படத்திலும் சூப்பராக செட் போட்டு அமர்க்களப்படுத்தியிருந்தார். விக்ரம் நடித்த தெய்வதிருமகள், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜகமே தந்திரம்', சுதா கொங்கரா இயக்கிய 'இறுதிச் சுற்று' ஆகிய படங்களிலும் சந்தானத்தில் ஆர்ட் டைரக்‌ஷன் அதிகம் கவனிக்கப்பட்டது.

ஏஆர் முருகதாஸின் பலம்

ஏஆர் முருகதாஸின் பலம்

மறைந்த ஆர்ட் டைரக்டர் சந்தானம், இயக்குநர் ஏஆர் முருகதாஸின் பெரிய பலமாக காணப்பட்டார். சர்கார், தர்பார் என அவரது படங்களில் அருமையான செட்களை அமைத்துக்கொடுத்துள்ள சந்தானம், தற்போது ஏஆர் முருதகாஸ் தயாரித்துள்ள '1947' படத்திலும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. பீரியட் படமாக உருவாகியுள்ள இதில், கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ளார். இந்நிலையில், மாரடைப்பால் உயிரிழந்த சந்தானத்தில் மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X