சர்கார் கொண்டாட்டம்... 19ம் தேதி வருகிறது முதல் அறிவிப்பு!
விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் முதல் அறிவிப்பு செம்படம்பர் 19ம் தேதி வெளியாகிறது.
சென்னை: சர்கார் படம் தொடர்பான முதல் அறிவிப்பு 19ம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார்.

விஜய் முதல்வராக நடித்துள்ள இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்கார் படத்தின் இசை அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியாகிறது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட் ஏற்கனவே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் சிகரெட்டுடன் காட்சியளித்த அந்த போஸ்டருக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து அப்படம் நீக்கப்பட்டது.
படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகின. சர்கார் படத்தின் ஒவ்வொரு புகைப்படமும் வைரலாகி வருகிறது. இந்நிலையில் வரும் 19ம் தேதி, அதாவது நாளை மறுதினம் காலை 11 மணிக்கு இப்படத்தின் முதல் அறிவிப்பு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான புகைப்படம் ஒன்றை அந்நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அக்டோபர் 2ம் தேதி வரை தொடர் அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறுது. இந்த அறிவிப்புகளுக்கு சர்கார் கொண்டாட்டம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











