வாவ், உலக அளவில் சர்கார் படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா!

By Siva

சென்னை: உலக அளவில் சர்கார் படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படம் தீபாவளி ஸ்பெஷலாக நேற்று வெளியானது. உலக அளவில் 3 ஆயிரத்து 400 ஸ்கிரீன்களில் படம் பிரமாண்டமாக ரிலீஸானது.

இந்நிலையில் முதல் நாள் வசூல் விபரம் தெரிய வந்துள்ளது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

சர்கார் படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 30 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் விஜய்யின் மெர்சல் படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை சர்கார் முறியடித்துள்ளது. மெர்சல் படம் ரிலீஸான அன்று தமிழகத்தில் ரூ. 24.8 கோடி வசூல் செய்திருந்தது. சர்கார் சென்னையில் மட்டுமே ரூ. 2.41 கோடி வசூலித்துள்ளது.

கேரளா

கேரளா

பாகுபலி படம் கூட தமிழகத்தில் ரிலீஸான அன்று ரூ. 19 கோடி தான் வசூல் செய்திருந்தது. சர்கார் படம் கேரளாவில் ரூ. 5.45 கோடி வசூலித்துள்ளது. தமிழகத்தை அடுத்து கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். தமிழகத்தை போன்றே கேரளாவிலும் சர்கார் தீபாவளி கொண்டாடினார்கள் தளபதி ரசிகர்கள்.

ரூ. 70 கோடி

ரூ. 70 கோடி

சர்கார் படம் உலக அளவில் ரூ. 70 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் ரூ. 2.31 கோடியும், ஆஸ்திரேலியாவில் ரூ. 1.16 கோடியும், இங்கிலாந்தில் ரூ. 1.17 கோடியும் வசூலித்துள்ளது. படம் வெளிநாட்டிலும் அமோக ஆதரவை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காலா

காலா

அமெரிக்காவில் ரிலீஸான அன்று அதிகம் வசூல் செய்த டாப் 3 தமிழ் படங்கள் பட்டியலில் சர்கார் இடம் பிடித்துள்ளது. அந்த பட்டியலில் முதல் இடத்தில் காலாவும், இரண்டாவது இடத்தில் மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X