படத்திற்கு விளம்பரம் வேண்டுமா?, தொடர்பு கொள்க பாஜக, அதிமுக: இயக்குனர் கிண்டல்
சென்னை: சர்காருக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததை பார்த்து ஆளாளுக்கு கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று அதிமுக அரசு தெரிவித்தது. இதையடுத்து அந்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.
அதிமுகவினரின் எதிர்ப்பை மக்களும், பிரபலங்களும் படத்திற்கான விளம்பரமாக பார்க்கிறார்கள்.
நவீன்
#Mersal #BJP
#Sarkar #AIADMK
விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்க என்று ட்வீட்டியுள்ளார் மூடர்கூடம் நவீன்.
நிதின் சத்யா
தமிழக அரசுக்கு நன்றி. மாநில மொழி படம் தேசிய அளவில் தலைப்புச் செய்தியாகிவிட்டது. #SARKAR என்று கிண்டல் செய்துள்ளார் நிதின் சத்யா.
எஸ்.ஆர். பிரபு
தணிக்கை செய்த படங்களை சர்ச்சைக்கு உள்ளாக்குவது எல்லாம் விளம்பர கணக்கில் தான் சேர்கிறது! அதுவும் இலவச விளம்பரம் 😬
#சர்க்கார் #Sarkar என்கிறார் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு.
ஜாலி
அடப்பாவிகளா?


Click it and Unblock the Notifications











