twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீண்டும் தமிழுக்கு வரும் டாங்லீ…!

    |

    Recommended Video

    மீண்டும் தமிழுக்கு வரும் டாங்லீ…!- வீடியோ

    சென்னை: சர்கார் திரைப்படத்தின் முக்கிய வில்லனாக ஜானி ட்ரை ங்யென் நடிக்கிறார்.

    துப்பாக்கி, கத்தி திரைப்படங்களுக்கு பிறகு ஏஆர்.முருகதாஸுடன் விஜய் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்திருக்கும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கும் விஜய்யின் 62வது திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது.

    Sarkar has another Big villain!

    இத்திரைப்படத்தில் ராதாரவி, அங்காடித் தெரு அண்ணாச்சி பழ கருப்பையா ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள் என்பது தெரிந்த விஷயம். நடிகை வரலட்சுமியும் இப்படத்தில் விஜய்க்கு எதிரான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

    இவர்களைவிட பெரிய வில்லன் ஒருத்தர் படத்தில் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முருகதாஸால் தமிழுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வியட்னாமைச் சேர்ந்த ஜானி ட்ரை ங்யென் நடிக்க உள்ளார். .

    யார் இந்த ஜானி..... என்று தலையைப் பிய்த்துக்கொள்ளாதீர்கள். ஏழாம் அறிவு படத்தில் சொறி நாய்க்கு ஊசிபோட்டு வைரஸை பரப்பிய அந்த சீனா வில்லன் டாங்லீ தான் ஜானி ட்ரை ங்யென். (இந்த பெயரை உச்சரிப்பதற்கு தங்க தமிழ்ப் பிள்ளைகள் சிரமப்படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு டாங்லீ என்று தொடர்கிறோம்)

    வியட்னாமில் பிறந்த இந்த டாங்லீக்கு வயது இப்போது 44 ஆகிறது. சண்டைபயிற்சியாளர் மற்றும் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையில் வல்லவரான அவர், அமெரிக்க, சீன படங்களில் நடித்துள்ளார். இப்போது அதிகமாக வியட்னாம் சினிமாவில் நடித்துவருகிறார்.

    ஏழாம் அறிவு திரைப்படத்தில் நோக்கு வர்மம் என்ற கலையைக் கற்றுவைத்துக்கொண்டு இவர் செய்யும் அட்டகாசங்கள் அசரவைத்தது. பின்னர் அதர்வாவுக்கு வில்லனாக இரும்புக்குதிரை திரைப்படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு தமிழில் தலைகாட்டாத அவர் இப்போது சர்க்கார் படத்தில் நடிக்கிறார்.

    English summary
    Popular Vietnamese American actor Johnny Tri Ngyuyen is Vijay's villain in Sarkar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X