6ம் தேதி அல்ல 2ம் தேதியே ரிலீஸாகும் சர்கார்?: இருக்கு மெகா காரணம் இருக்கு
சென்னை: விஜய்யின் சர்கார் படத்தை 6ம் தேதிக்கு பதில் 2ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள சர்கார் தீபாவளி ஸ்பெஷலாக நவம்பர் மாதம் 6ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் படக்குழு மனதை மாற்றிக் கொண்டதாக தெரிகிறது.

ரிலீஸ்
சர்கார் படத்தை 6ம் தேதிக்கு பதில் 2ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2ம் தேதி வெள்ளிக்கிழமை, மேலும் தொடர் விடுமுறையால் தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழியும் என்பதை மனதில் வைத்து ரிலீஸ் தேதியை மாற்ற முடிவு செய்துள்ளார்களாம். வெள்ளிக்கிழமை துவங்கி செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து 5 நாட்கள் வசூல் வேட்டை நடத்தவே இந்த திட்டம்.

படம்
சர்கார் படத்தை இந்த வாரமே சென்சார் போர்டுக்கு அனுப்பி வைக்கப் போகிறார்களாம். தேதி மாறினால் என்ன சர்காரை கொண்டாட விஜய் ரசிகர்கள் தயாராகிவிட்டனர். 2ம் தேதி வெளியானாலும் சரி, 6ம் தேதி வெளியானாலும் சரி சர்கார் படத்தை தெறிக்க விடுவது என்ற எண்ணத்தில் உள்ளார்கள் ரசிகர்கள்.

கவலை
பட ரிலீஸ் தேதி மாறுவதில் விஜய் ரசிகர்களுக்கு கவலை இல்லை. ஆனால் கதை திருட்டு பிரச்சனையால் தான் லைட்டா பயத்தில் உள்ளனர். கதை 95 சதவீதம் திருடப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால் படத்திற்கு கடைசி நேரத்தில் ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். இருப்பினும் தயாரிப்பாளரும், இயக்குனரும் சேர்ந்து இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண்பார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

வரலட்சுமி
சண்டக்கோழி 2 படத்தில் ஹீரோயினான கீர்த்தி சுரேஷை விட வில்லியான வரலட்சுமி சரத்குமார் நல்ல பெயர் வாங்கிவிட்டார். படத்தை பார்த்தவர்கள் வரலட்சுமியின் நடிப்பை தான் அதிக அளவில் புகழ்ந்தனர். சர்காரிலும் வரலட்சுமி தனது நடிப்பால் மிரட்டுவார் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











