ஓகே.. தமிழிசை "பாராட்டி" விட்டார்.. அப்படியே எச். ராஜாவும் மனசு வச்சுட்டார்னா!

By Siva

சென்னை: பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சர்கார் படத்தை பற்றி விமர்சித்துள்ளதால் படம் நிச்சயம் ஹிட்டாகிவிடும் என்ற நம்பிக்கை தளபதி ரசிகர்களுக்கு வந்துவிட்டது.

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் நாளை பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது. கேடிஎம் பிரச்சனை எதுவும் இல்லாமல் அதிகாலை காட்சி ரத்தாகாமல் படம் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

அண்மை காலமாக கேடிஎம் பிரச்சனையால் பெரிய நடிகர்களின் படங்களின் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த முதல்வர்

அடுத்த முதல்வர்

சர்கார் படம் ரிலீஸாக உள்ள நேரத்தில் விஜய்யை அடுத்த முதல்வர் என்று கூறி போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர் அவரின் தீவிர ரசிகர்கள். விஜய்யை தமிழக முதல்வராகப் பார்க்க அவர்கள் துடிக்கிறார்கள். அவர்களின் ஆசையில் தவறு எதுவும் இல்லை என்று விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி. கூட தெரிவித்துள்ளார்.

தமிழிசை

தமிழிசை

சர்கார் படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அது குறித்து விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, "கள்ளக்கதை மூலம் படம் எடுப்பவர்கள் கள்ள ஓட்டு பற்றி படம் எடுத்திருக்கிறார்கள். சினிமாவில் விஜய் நேர்மையாக இருக்க வேண்டும். இது கார்ப்பரேட்களுக்கான ஆட்சி இல்லை. காமன்மேன்களுக்கான ஆட்சி. முதல்வர் கனவோடு நடிக்கிறவர்கள் திரையில் தான் ஆட்சி செய்ய முடியும். சினிமாவில் தான் சர்கார் அமைக்க முடியும்; நிஜத்தில் முடியாது" என்றார்.

ஹிட்

ஹிட்

விஜய்யை பொருத்த வரை தமிழிசை சவுந்தரராஜன் ராசியானவர். தமிழிசை விஜய்யின் படத்தை விமர்சித்தால் அது நிச்சயம் ஹிட்டாகிவிடுகிறது. மெர்சலை அவர் விமர்சனம் செய்த ராசி அந்த படம் சூப்பராக ஓடியது. இந்நிலையில் அவர் சர்கார் படத்தை விமர்சித்திருப்பது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஹெச். ராஜா

ஹெச். ராஜா

மெர்சல் படத்தை தமிழிசையுடன் சேர்ந்து பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவும் விமர்சித்தார். அதனால் அவர் விமர்சனமும் ராசியான விஷயமாக கருதப்படுகிறது. ராஜா சார், அப்படியே நீங்களும் சர்கார் பற்றி நாலு வார்த்தை சொன்னீங்கன்னா படம் பரிபூரண ஹிட்டாகிவிடும். கொஞ்சம் பார்த்து செய்ங்க.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X