சர்கார் கதை திருட்டு: தலையை சுற்றி மூக்கத் தொட்ட முருகதாஸ்
Recommended Video

சென்னை: சர்கார் கதை திருடப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்ட நிலையில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தலையை சுற்றி மூக்கைத் தொட்டுள்ளார்.
சர்கார் படத்தின் கதை தான் எழுதிய செங்கோல் படத்துடையது என்று உதவி இயக்குனரான வருண் ராஜேந்திரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றியும் பெற்றுள்ளார்.
விஜய்க்காக எழுதி வைத்த செங்கோலை அவருக்கு டெடிகேட் செய்வதாக வருண் தெரிவித்துள்ளார்.
சர்கார்
சர்கார் படத்தில் நன்றி கார்டு வந்த பிறகு 30 வினாடிகள் வருண் குறித்த தகவலை காட்ட முருகதாஸ் ஒப்புக் கொண்டுள்ளார். அந்த தகவலில் அவர் கூறியிருப்பதாவது, மாதக் கணக்கில் ஆலோசனை நடத்தி சர்கார் ஸ்க்ரிப்டை நான் எழுதி, படத்தை இயக்கியுள்ளேன். இணை இயக்குனர் வருண் அதே கருவை கற்பனை செய்து அதற்கான ஸ்க்ரிப்ட்டை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளது தெரிய வந்தது.
முருகதாஸ்
கதை தன்னுடையது என்று முருகதாஸ் கூறி வந்தார். இந்நிலையில் ஸ்க்ரிப்டை வருண் தனக்கு முன்பு பதிவு செய்துள்ளதை அவரே ஒப்புக் கொண்டது ரசிகர்களை வேதனை அடைய வைத்துள்ளது.

பிரச்சனை
விஜய் படத்திற்கு தன்னால் பிரச்சனை வந்து ரிலீஸ் பாதிக்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் கதையை திருடாமலேயே அதை திருடியதாக முருகதாஸ் ஒப்புக் கொண்டதாக அவரது தீவிர ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

பெரிய இயக்குனர்
தனது திறமையால் முன்னுக்கு வந்தவர் முருகதாஸ். அவரின் திறமையை பார்த்து வியந்தவர்கள் பலர். அப்படிப்பட்டவர் கதை திருடினார் என்பதை பலராலும் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.


Click it and Unblock the Notifications











