twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரசின் நலத்திட்டங்களை விமர்சித்த முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: தமிழக அரசு

    By Siva
    |

    Recommended Video

    பிறந்தநாள் கொண்டாடிய உதயநிதி.. சர்க்கார் சிக்கலில் சிக்கிய முருகதாஸ்.. வீடியோ

    சென்னை: சர்கார் படத்தில் அரசின் நலத்திட்ட உதவிகளை விமர்சித்த இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் இலவச மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை தீயில் போட்டு எரிக்கும் காட்சிக்கு தமிழக அரசு தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    Sarkar issue: TN govt. wants Murugadoss to apologise

    அரசின் எதிர்ப்பை அடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில் சர்கார் படம் குறித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதிட்டது.

    அரசின் நலத்திட்ட உதவிகளை விமர்சித்த இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அரசையோ அரசின் நலத்திட்டங்களையோ விமர்சிக்க மாட்டேன் என உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இது குறித்து முருகதாஸிடம் விளக்கம் கேட்டுவிட்டு பதில் அளிப்பதாக அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

    English summary
    TN government wants director AR Murugadoss to apologise for criticising government schemes in Sarkar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X