ரிலீஸான இரண்டே நாட்களில் ரூ. 100 கோடி வசூல்: சர்கார் புதிய சாதனை #Sarkar100CrIn2Days
Recommended Video

சென்னை: சர்கார் படம் ரிலீஸான இரண்டே நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சர்கார் படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.
படம் ரிலீஸான இரண்டே நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்துள்ளது.
[ 'பத்து வருஷமா நான் படத்த எடுக்காம இருந்தப்பயே யோசிச்சிருக்கணும்' - சர்கார் சரவெடி மீம்ஸ்]
ரூ. 100 கோடி
சர்கார் படம் ரிலீஸான இரண்டே நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்துள்ளது படக்குழுவை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. விஜய் படம் ஒன்று இரண்டு நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்துள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். #Sarkar100CrIn2Days
விஜய்
விஜய்யின் 6 படங்கள் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. ஆனால் சர்கார் தான் அதிவேகத்தில் ரூ. 100 கோடி வசூல் செய்த படம். இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடத் துவங்கிவிட்டனர்.

ஆவல்
கதை பிரச்சனையில் சிக்கியது சர்கார் படம். ஆனால் அப்படி என்ன தான் கதையாம் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலில் பலர் படத்தை பார்த்தனர். கதை பிரச்சனை கூட சர்காருக்கு விளம்பரமாக மாறிவிட்டது. மேலும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் ஹெச். ராஜா ஆகியோர் படத்தை விமர்சித்ததும் கை கொடுத்துள்ளது.

வசூல்
வார நாட்களிலேயே சர்கார் இப்படி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் வார இறுதி நாட்கள் வருவதால், வசூலில் நிச்சயம் மேலும் பல புதிய சாதனைகள் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











