அமெரிக்காவில் மாஸ் ஓபனிங்! விஜய் படங்கள் எட்டாத புதிய மைல் கல்லை எட்டும் சர்கார்!
Recommended Video

நியூயார்க்: அமெரிக்காவில் சர்கார் திரைப்படம் மிகப் பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ், விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியிருக்கும் படம் சர்கார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா, யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
இப்படம் உலகெங்கிலும் மிகப் பிரம்மாண்டமாக தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது.

சமீபத்தில் வெளியான சர்கார் டீசர் குறைவான நேரத்தில் அதிக பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்தது. இப்படத்தில் விஜய் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்திருப்பதாக முருகதாஸ் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் வில்லனாக இருக்கும் விஜய் பிறகு ஹீரோவாகிறார். கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையை ஞாபகப்படுத்தும் விதமாக விஜய் இருப்பார் என்றும் சொல்லப்படுகிறது.
படத்தின் முக்கிய காட்சிகளை அமெரிக்காவில் படமாக்கியுள்ளனர். அதனால் அமெரிக்க வாழ் இந்தியர்களிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 200 திரையரங்குகளில் சர்கார் திரையிடப்பட உள்ளது. அமெரிக்க திரையரங்க உரிமையை பெற்றுள்ள நர்மதா மீடியாவும் கோலிவுட் மூவீஸ் அமெரிக்காவும் இணைந்து இப்படத்தை ரிலீஸ் செய்கின்றன.
அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் குறிப்பாக வட அமெரிக்க பகுதிகளில் சர்கார் தீபாவளி கொண்டாட்டம் களைகட்ட உள்ளது. இதற்கு முந்தைய விஜய் படங்கள் எதுவும் இவ்வளவு பிரமாண்டமாக அமெரிக்காவில் ரிலீஸானது இல்லை என்பதால் அகில உலக தளபதி ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











