ஐந்து கண்டங்கள்.. எண்பது நாடுகள்… மாஸாக ரிலீஸாகும் சர்கார்!

Recommended Video

ஐந்து கண்டங்கள், 80 நாடுகளில் வெளியாக போகும் சர்கார் திரைப்படம்- வீடியோ

சென்னை: சர்கார் திரைப்படம் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட எண்பது நாடுகளில் ரிலீஸாக உள்ளது.

ஏஆர்.முருகதாஸ் விஜய் கூட்டணியில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் சர்கார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

இப்படம் மிகப்பிரம்மாண்டம்மாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

பிரம்மாண்டம்

பிரம்மாண்டம்

திரைகடல் ஓடி திரவியம் தேடு என்பதை மெய்ப்பிக்கும் விதமாக உலகெங்கும் தமிழர்கள் பரவி வாழ்கின்றனர். அப்படி பல நாடுகளில் வசிக்கும் தமிழர்களையும், விஜய் ரசிகர்களையும் சர்கார் ஒன்றிணைக்கப் போகிறது. ஒட்டுமொத்த விஜய் ரசிகர்கள் மற்றும் உலகத் தமிழர்களின் கொண்டாட்ட காரணியாக சர்காரை மாற்ற படக்குழு திட்டமிட்டுள்ளது.

மெர்சல்

மெர்சல்

அமெரிக்காவில் மட்டுமே சர்கார் திரைப்படம் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இது இதற்கு முந்தைய விஜய் படங்களுக்கு கிடைத்த ஓபனிங்கை விட அதிகம். மெர்சல் திரைப்படம் 127 திரையரங்குகளில் ரிலீஸானது. ஐந்தாம் தேதியே அமெரிக்காவில் பிரிமியர் காட்சியை திரையிட திட்டமிட்டுள்ளனர். அமெரிக்க ரிலீஸ் வேலைகளில் நர்மதா ட்ராவல்ஸ் மற்றும் கோலிவுட் மூவீஸ் யு.எஸ்.ஏ மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

ரஷ்யா

ரஷ்யா

போலந்து, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து, ரஷ்யா உக்ரைன், துபாய், சிங்கப்பூர் என ஐந்து கண்டங்களில் மொத்தம் எண்பது நாடுகளில் சர்கார் ரிலீஸாக உள்ளது. மொத்தம் 1200 திரையரங்குகளில் ரிலீஸாகிறது. ஏ&பி குரூப் மற்றும் டி ஃபோகஸ் நிறுவனங்கள் சர்கார் ரிலீஸ் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதிக நாடுகள்

அதிக நாடுகள்

அமெரிக்கா, வட அமரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா மற்றும் ஐரோப்பா என ஐந்து கண்டங்களில் சர்கார் ரிலீஸாக உள்ளது. இதுவரை எந்த தமிழ்த் திரைப்படமும் இத்தனை பிரம்மாண்டத்துடன் ஐந்து கண்டங்களில் ரிலீஸானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு சீமராஜா திரைப்படம் போலந்தில் ரிலீஸானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X