சர்கார் பாட்டு 6 மணிக்கு ரிலீஸ்: ஆனா நீங்க 5 மணிக்கே பார்க்கலாம்

சர்கார் படத்தின் சிங்கிள் டிராக் இன்று மாலை வெளியாகிறது

Recommended Video

சிம்டாங்காரன் சுவாரஸ்சியங்கள்- வீடியோ

சென்னை: சர்கார் திரைப்படத்தின் சிங்கிள் டிராக் இன்று மாலை வெளியாகிறது.

அகில உலக விஜய் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சர்கார் திரைப்படத்தின் சிங்கிள் டிராக் இன்று மாலை வெளியாக உள்ளது.

சர்வதேச அளவில் சிறந்த நடிகரக விஜய் அறிவிக்கபப்ட்டுள்ளதால், பனிரெண்டாம் வகுப்பில் மாநிலத்தின் முதல் மதிப்பெண் எடுத்த மாணவனின் மனநிலையில் தான் விஜய் ரசிகர்கள் உள்ளனர். ஃபேஸ்புக், ட்விட்டர் என எல்லா சமூக வலைதளங்களிலும் சர்கார் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.

Sarkar movie single track

அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக இன்று மாலை சர்கார் திரைப்படத்தின் "சிம்டாங்காரன்"' என்ற பாடல் வெளியாக உள்ளது. மாலை 6 மணிக்கு பாடல் வெளியாக உள்ள நிலையில், வெளியாவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே விஜய் ரசிகர்கள் பாடலைக் கேட்பதற்கான ஒரு அரிய வாய்ப்பை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வழங்குகிறது.

சன் குழுமத்தின் சன் நெக்ஸ்ட் ஆப்-ஐ டவுன்லோட் செய்து கொண்டால் அதில் ஐந்து மணிக்கே கேட்கலாம் என அறிவித்துள்ளது. அந்த ஆப் அதிகமாக டவுன்லோட் செய்யப்படுவதற்கு அற்புதமான யுக்தியைக் கையாண்டாலும், விஜய் ரசிகர்களும் ஏஆர்.ரஹ்மானின் ரசிகர்களும் நிச்சயம் மகிழ்ச்சியடைவர்.

சிங்கிள் டிராக் இன்று மாலை வெளியாக உள்ள நிலையில், எல்லா படல்களும் அக்டோபர் 2ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன. மிகப்பிரம்மாண்டமாக நடக்க உள்ள சர்கார் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியையும், ரசிகர்கள் நேரில் பார்த்து ரசிக்க போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சர்கார் திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் "ஆளப்போறான் தமிழன்" புகழ் விவேக் எழுதியுள்ளார். விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா, யோகிபாபு மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படம் தீபாவளி விருந்தாக ரிலீஸாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X