ஏன்பா தம்பி தம்மடிச்சன்னு நானே விஜய்யை கேட்கிறேன்: டி. ராஜேந்தர்
Recommended Video

சென்னை: சர்கார் பட போஸ்டர் பிரச்சனை தொடர்பாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார் டி. ராஜேந்தர்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் பட போஸ்டரில் தளபதி தம்மடிப்பது போன்று போஸ் கொடுத்தது பிரச்சனையாகியுள்ளது.
இந்த போஸ்டர் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விஜய், முருகதாஸ், சர்கார் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் தலா ரூ. 10 கோடி அளிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பதில் அளிக்குமாறு கூறி விஜய், முருகதாஸ் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து இயக்குனரும், நடிகருமான டி. ராஜேந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

கோவலன்
சினிமாவை பார்த்து தான் கெட்டுப் போகிறார்கள் என்று சொன்னால், சினிமாவே வராத காலத்தில் கோவலன் கண்ணகியை விட்டு மாதவியை தேடிப் போனானே. எந்த சினிமா கோவலனை கெடுத்தது?

பிரதிபலிப்பு
சமுதாயத்தில் இருப்பதை தான் சினிமா பிரதிபலிக்கிறது. சினிமாவில் இருப்பதை வைத்து சமுதாயம் இல்லை. புகைப்பிடிக்கக் கூடாது என்பது நல்லது. தனி மனித ஒழுக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். சினிமாவில் இருக்கும் நடிகர் சிகரெட் பிடிச்சிட்டா மட்டும் தான் தப்பா?

விஜய்
அது என்னய்யா இளைய தளபதி விஜய் சிகரெட் பிடிச்சா மட்டும் டார்கெட் பண்றீங்க? தமிழன் என்பதாலா? எனக்கும் சன் டிவிக்கும் தனிப்பட்ட பிரச்சனை இருக்கலாம். ஆனால் மத்த படத்திற்கு இல்லாமல் சன் டிவியின் இந்த படத்திற்கு ஏன் பிரச்சனை செய்கிறீர்கள்? ஒரு வேளை பப்ளிசிட்டியா?

சிகரெட்
சினிமாவில் ஒரு கேரக்டர் டிரம் அடிக்கணும்னா அடிச்சுத்தான் ஆகணும், தம்மடிக்கணும்னா அடிச்சுத் தான் ஆகணும். என்ன தப்பு? புகையிலையை ஒழிச்சுக்கட்டு. கஞ்சா தடை செய்யப்பட்டிருக்கிறது அல்லவா. புகையிலை, சிகரெட்டை தடை பண்ணுங்க. உங்களால் பதவியில் இருந்தபோது ஏன் தடை செய்ய முடியவில்லை?

புகையிலை
தடை பண்ணுவோம், தடை பண்ணுவோம்னு சொல்வீங்க, சொல்லிக்கிட்டே இருப்பீங்க ஆனால் பண்ண மாட்டீங்க. ரசிகர்கள் மத்தியில் அமர்ந்து கொண்டு விஜய் தம்மடிக்கிறார் என்று சொல்லுங்க, விஜய்யை நான் கேட்கிறேன் என்கிறார் டி.ராஜேந்தர்.


Click it and Unblock the Notifications











